மோடி அரசு GDP-யைக் கணக்கிட எத்தனை தவறுகள் செய்தார்கள்..? என்ன மாதிரியான தவறுகள் செய்தார்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி டேட்டாக்களைக் கணக்கிட மோடி அரசு பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என என்.எஸ்.எஸ்.ஓ தோலுரித்துக் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவின் ஜிடிபியைக் கணக்கிட, அடிப்படை ஆண்டை 2004 - 05-ல் இருந்து 2011 - 12-ஆக மாற்றியது. புதிய அடிப்படை ஆண்டுகள் படி அடுத்தடுத்த ஆண்டின் ஜிடிபி தரவுகளை வெளியிட்டால் பரவாயில்லை. ஆனால் நம் மோடி பின் நோக்கிச் சென்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் ஜிடிபி தரவுகளையே மாற்றி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டியது.

 

உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010 - 11 நிதி ஆண்டில் தான், இது வரை இந்தியப் பொருளாதாரம் காணாத 10.26 சதவிகித ஜிடிபி வளர்ச்சியைக் காட்டினார்கள். ஆனால் நம் மோடி புதிய அடிப்படை ஆண்டான 2011 - 12-ன் அடிப்படையில் 2010 - 11-ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 8.5 சதவிகிதம் தான் எனச் சொன்னார். அதோடு நிற்காமல் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சியே 6.67 சதவிகிதம் தான் எனவும் கணக்கிட்டுச் சொன்னார்கள். சர்ச்சைப் புயலில் சிக்கியது இந்திய ஜிடிபி.

இந்த சர்ச்சைகள் எல்லாம் இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் இன்று என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பின் கருத்தால், மீண்டும் உயிர் பெற்றுவிட்டது இந்த ஜிடிபி சர்ச்சைகள். இந்த பிரச்னைக்கு உயிர் கொடுக்க, ஜிடிபியைக் கணக்கிட மோடி அரசு நான்கு தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார்கள் பாஜகவினர். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மோடி ஆட்சியில் ஜிடிபியை அதிகமாக காட்ட நடந்த தில்லாலங்கடி..! தோலுறித்த என்.எஸ்.எஸ்.ஓ..!

1. தலையீடு

1. தலையீடு

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகத்தின் (MOSPI) கீழ் இயங்கும் அமைப்பு தான் இந்த மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO). இவர்கள் தான் ஜிடிபி தரவுகளை கணக்கிடுவது, வெளியிடுவது எல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த அலுவலகம் தான் இந்தியாவின் புள்ளியியல் சார்ந்த அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு டேட்டாக்களைக் கணக்கிட்டு வெளியிடும் போதும் மத்திய அரசு நேரடியாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நிதி அயோக். ப சிதம்பரமே நிதி அயோக்கின் வேலை டேட்டாக்களைச் சரி செய்து வெளியிடுவது தானா..? என கலாய்க்கும் அளவுக்கு போனது நிதி அயோக்கின் தலையீடு.

2. எம் சி ஏ 21

2. எம் சி ஏ 21

பழைய ஜிடிபி டேட்டாக்களில் மத்திய ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்களிடம் எடுத்த சர்வேக்களில் கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி, இந்திய ஜிடிபியை கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் 2015-ம் ஆண்டில் இருந்து வெளியிட்ட புதிய ஜிடிபி டேட்டாக்களில், நிறுவனங்களே முன் வந்து சமர்பிக்க வேண்டிய MCA 21 டேட்டாபேஸ் தகவல்களை, அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு இருக்கிறார்கள்.

3. ஆராயவில்லை
 

3. ஆராயவில்லை

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சோதனைக்கு உட்படுத்தாத MCA 21 டேட்டாபேஸின் நம்பகத் தன்மையை அதிகாரிகள் உட்பட, பலரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை மீதும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் , MCA 21 டேட்டா பேஸை ஆராயாமலேயே இந்தியாவின் ஜிடிபியை கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

4. தவறாக வகைப்படுத்தல்

4. தவறாக வகைப்படுத்தல்

இந்த MCA 21 டேட்டா பேஸில் சேவைத் துறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது அந்த நிறுவனங்கள் எங்கு இருக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. இதைக் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது அரசு. இப்படி ஒரு நிறுவனமே எங்கு இருக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியாத தரவுகளை வைத்துக் கொண்டு தான் இந்தியாவின் ஜிடிபியைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

டெல்லி பேராசிரியர்

டெல்லி பேராசிரியர்

இந்தியாவிலேயே ஜிடிபி கணக்கீட்டில் மட்டும் தான் இந்த MCA 21 என்கிற டேட்டாபேஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஜிடிபியைக் கணக்கிட இந்த MCA 21 டேட்டாக்களையே அதிகம் பயன்படுத்தி இருந்தால் இது மிகப் பெரிய பிரச்னை தான் என்றும் எச்சரிக்கிறார்.

மோகனன்

மோகனன்

என். எஸ்.எஸ்.ஓ தலைவராக இருந்த மோகனன் "இந்தியாவின் ஜிடிபி டேட்டாக்களைக் கணக்கிட MCA 21 டேட்டா பேஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு பெரிய மாற்றம் தான். ஆனால் இப்படி புதிய டேட்டா பேஸ்களைப் பயன்படுத்தும் முன், பல முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் தான் பொருளாதார டேட்டாக்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும். அப்போது தான் ஒரு டேட்டா பேஸின் துல்லியமும் முழுமைத் தன்மையும் உறுதி செய்யப்படும். இப்போது மத்திய புள்ளியியல் துறை, இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் MCA 21 டேட்டா பேஸில் செய்தார்களா இல்லையா..? என பதிலளிக்க வேண்டும்" என்கிறார். என்னங்க மோடி ஜி ஒன்னு ரெண்டு பொய்யா இருந்தா ஓகே, எல்லாமே பொய்யின்னா என்னத் தான் செய்யுறது..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

what are the mistakes that bjp government done to calculate their gdp

what are the mistakes that bjp government done to calculate their gdp
Story first published: Wednesday, May 8, 2019, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X