டெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகர லாபம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளதாகவும், இதுவே அடுத்த நிதியாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும் ஹெச்.சி.எல் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மார்ச் மாத காலாண்டில் ஹெச்.சி.எல் 4-வது காலாண்டு நிகர இலாபம் ரூ.2,568 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 1.7% குறைவாகும். இதுவே வருடத்தில், நிகர லாபம் 15.3% உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது.

இதே கடந்த நிதியாண்டில் மொத்தம் நிகர இலாபம் ரூ 10,000 கோடியை கடந்து ரூ.10,123 ஆக உயர்ந்துள்ளது.
இதே வருவாய் காலாண்டில் 1.9% அதிகரித்து ரூ. 15,990 கோடியாக அதிகரித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 21.3% வருவாய் அதிகரித்துள்ளது. இதே தொடர்ந்து நாணயத்தில் வருவாய் 3.3% காலாண்டிலும், 15.3% ஆண்டிலும் உயர்ந்தது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஓ பிரதீக் அகர்வால் கூறுகையில், நாங்கள் ஒட்டுமொத்த திடமான செயல்திறனை கடந்த நிதியாண்டில் வழங்கியுள்ளோம். இதில் ஆண்டுக்கான EBIT விளிம்பு 19.5% உள்ளது.
இதனால் கடந்த நிதியாண்டில் நாங்கள் கணிசமான இடத்தை பிடித்துள்ளோம். கடந்த நிதியாண்டில் மட்டும் வருவாய் சுமார் ரூ.60,000 கோடிக்கு அதிகமாகவும், நிகர லாபம் ரூ.10,000 கோடியையும் கடந்து விட்டது என்கிறார் பிரதீக்.
கடந்த மார்ச் மாத காலாண்டில் செயல்பாட்டு விளிம்பு 18.9% ஆக குறைந்தது, இது டிசம்பர் காலாண்டில் 19.6% ஆக இருந்தது கவனிக்கதக்கது. மேலும் ஐடி ஆர்டர்கள் (வேலை சம்பந்தமான) கடந்த மார்ச் காலாண்டில் 17.7% ஆகக் குறைந்தது, இதுவே டிசம்பர் காலாண்டில் 17.8% இருந்தது கவனிக்கதக்கது. இருப்பினும் அடுத்து வரும் காலாண்டுகளிலும் லாபம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார் பிரதீக்.
இதோடு EBIDTA வருமானம், அதாவது வட்டி,வரி, தேய்மானம் செலவுகளூக்கு முந்தைய வருமானம் 3,704.4 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகரித்தும் காணப்படுகிறது.
கடந்த மார்ச் மாத காலாண்டில் நிறுவனம் மொத்த அளவில் 14,249 பேரை வேலைக்கு சேர்த்துள்ளதாம், இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 8,476 வேலைக்கு சேர்த்திருந்தது. இதுவே டிசம்பர் காலாண்டில் 13,191 நபர்களையும் சேர்த்துள்ளதாம்.
இதே கடந்த மார்ச் காலாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1.38 லட்சமாக இருந்தது. இது டிசம்பர் காலாண்டில் 1.32 லட்சமாக இருந்தது. டி.டி.எஸ் சேவைகளின் வர்த்தக விகிதம் கடந்த காலாண்டில் 17.70 சதவிகித இருந்தது. இதே டிசம்பர் காலாண்டில் 17.80 சதவீதமாக இருந்ததுள்ளது.


Click it and Unblock the Notifications