கலக்கல் பங்குகள்.. எல்.ஐ.சிக்கு லாபத்தை கொடுத்த நிறுவனங்கள்.. இதோ லிஸ்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : எல்.ஐ.சி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது இன்சூரன்ஸ் தான். ஆனால் நாம் முதலீடு செய்யும் பணத்தை எதில் முதலீடு செய்கின்றது என்றால் அது பலருக்கும் தெரியாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் பங்கு சந்தையில் முதலீடு என்றாலே பலருக்கும் பயம் தான். ஆனால் அவர்கள் தயாங்காமல் எல்.ஐ.சியில் முதலீடு செய்வது தான் ஹைலைட்.

 

அட ஆமாங்க எல்.ஐ.சியும் நாம் முதலீடு செய்யுற பணத்தை பகுதிகளாக பிரித்து அதை முதலீடு செய்யும். இவ்வாறு முதலீடு செய்த சில பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. எல்.ஐ.சி குறிப்பிட்ட 70 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாம். அதன் மூலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் செய்ததில் நல்ல லாபத்தையும் பார்த்துள்ளதாம். இதில் 35 நிறுவனங்களின் பங்குகளையும் விற்று லாபத்தை புக் செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாம்.

பெஞ்ச் மார்க் குறியீடுகள், கடந்த 3 மாதங்களில் பங்கு சந்தைகள் நன்றாக விரிவடைந்திருந்தாகவும் கூறியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் எல்.ஐ.சி வாங்கிய 35 நிறுவனத்தின் பங்குகள் 50% வரை சரிந்தன. குறிப்பாக ஹெக், ஜேபி இன்ஃபிராடெக், டாடா கெமிக்கல்ஸ், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், டாட்டா காபி, கெயில் இந்தியா, என்எம்டிசி மற்றும் அதானி துறைமுகம் ஆகியவை இதில் அடங்கும். அப்புறம் எப்படி லாபம்னு கேட்கிறீங்களா? பங்குகளை முதலீடு செய்வதை பகுதியாக பிரித்து முதலீடு செய்வது தான் இதன் சிறப்பே.

2019 IPL Final டிக்கெட் சர்ச்சை! 9 வகை டிக்கெட்டுகளில் 5 வகை டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை!

புளூ சிப் பங்குகளில் முதலீடு

புளூ சிப் பங்குகளில் முதலீடு

அதோடு எல்.சி.ஐ சில புளு சிப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக எம் & எம், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.டி.சி, ஒ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, விப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், பி.சி.சி.எல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாம்.

இந்த பங்கு முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு உதவும்

இந்த பங்கு முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு உதவும்

இந்த பங்கு முதலீடுகள் மற்ற முதலீட்டாளர்களுக்கும் உபயோகமுள்ளவகையில் இருக்கும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். எல்.ஐ.சி முதலீடு செய்யும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு ஒரு ஐடியாவைக் கொடுக்கும். ஆனால் பங்குகள் வாங்குதல் விற்பது போன்ற ஐடியாக்களை தராது. மேலும் எவ்வளவு பங்குகள் வாங்க வேண்டும் என்றும் தெரியாது. அதை இதற்கு தகுந்த ஆலோசகரின் மூலம் முதலீடு செய்வது நல்லது.

ஆலோசனையுடன் முதலீடு செய்யுங்கள்
 

ஆலோசனையுடன் முதலீடு செய்யுங்கள்

இந்த லிஸ்டில் உள்ள பங்குகள் சில நிர்வாக சிக்கல்களைக் கொண்டிருந்தாலும், அது பங்கு வர்த்தகத்தில் நல்ல முறையில் லாபத்தை கொடுத்திருக்கும். இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யும் போது தகுந்த ஆலோசனையுடன் செய்வது நல்லது.

கடன் & நிர்வாக சிக்கல் உள்ள பங்குகளை கவனமுடன் பாருங்கள்

கடன் & நிர்வாக சிக்கல் உள்ள பங்குகளை கவனமுடன் பாருங்கள்

ஒரு பகுத்தறிவார்ந்த முதலீட்டாளர் நிச்சயமாக பெரு நிறுவன நிர்வாக கடன்கள் மற்றும் பல சிக்கல்களைப் கொண்டிருக்கும், பங்கு வைத்திருக்க மாட்டார். அதுவும் நீண்ட காலமாக பலவீனமாக உள்ள ஒரு பங்கினையும் வைத்திருக்க மாட்டார்கள். ஆக இது போன்ற பங்குகள் முதலீட்டில் கவனம் கொள்வது நல்லது.

ஸ்மார்ட்டான லாபம்

ஸ்மார்ட்டான லாபம்

ஒரு சிறிய பங்கு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக சிறிய அளவு மாற்றத்தினை கண்டு வருகிறது எனில், நிச்சயம் நல்லதொரு லாபத்தை கொடுக்கும் என நம்பலாம். இத்தகைய பங்கினை பழைய அறிக்கைகள் மூலம் அல்லது அந்த நிறுவனத்தின் பழைய அறிக்கைகள் மூலம் அறியலாம்.

முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முதலீட்டாளரும், தொடர்ச்சியான பகுப்பாய்வு மூலம் திட்டமிடப்பட்ட எதிர்கால மதிப்பை உருவாக்க பங்குகளின் சாத்தியமான மதிப்பீட்டை மதிப்பீடு செய்ய சரியான முறையில் கவனத்தை செலுத்த வேண்டும்.

எல்.ஐ.சி முதலீட்டில் லாபம் கொடுத்த பங்குகள்

எல்.ஐ.சி முதலீட்டில் லாபம் கொடுத்த பங்குகள்

இவ்வாறு எல்.ஐ.சி பகுத்தாய்வு செய்த முதலீட்டில் அதிக லாபம் கொடுத்த பங்குகள் சிலவற்றை காணலாம். குறிப்பாக மகாநகர் டெலிபோன் நிகாம், லார்சன் & டூப்ரோ, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, என்.டி.பி.சி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், யெஸ் பேங்க், டாடா பவர், பஞ்சாப் நேஷனல் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்‌ரீஸ், ஏசிசி லிமிடெட், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கிளாக்சோஸ்மித் க்ளைன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.

எல்.ஐ.சி முதலீடு அதிகரித்துள்ள பங்குகள்

எல்.ஐ.சி முதலீடு அதிகரித்துள்ள பங்குகள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சில பங்குகளில் மேற்கொண்டு பங்குகளை அதிகரித்திருக்கிறது எல்.ஐ.சி. அப்படியென்ன பங்கு என் கிறீர்களா? ஹெக் லிமிடெட், ஜேபி இன்ஃப்ராடெக், ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்டிரக்சர், எம்.&ஏம், எக்ஸைடு இண்டஸ்‌ரீஷ், டாடா கெமிக்கல்ஸ், பிரிட்டானியா, என்.ஹெச்.பி.சி, டாடா காஃபி, பாரதி ஹெவி எலக்ரிகல்ஸ், பாஸ்க், ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ், பிராமல் எண்டர்பிரைசஸ், கெயில் அதானி போர்ட்,ஓரியண்டல் கார்பன் & கெமிக்கல்ஸ், என்.எம்.டி.சி உள்ளிட்ட பங்குகள் மேற்கொண்டு அதிகரித்துள்ளதாம்.

நிதிக்கு ஏற்றாற் போல் பங்கு முதலீடு

நிதிக்கு ஏற்றாற் போல் பங்கு முதலீடு

முதலீட்டாளர்கள் இதுபோன்ற பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, முதலீட்டாளர்கள் நிபுணர்களின் ஆலோசனையுடன் நிதிக்கு ஏற்றாற்போல பங்குகளை வாங்கி பயனடையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lic எல்ஐசி
English summary

LIC raises stake in 35 companies in Q4, books profit in 70

India’s largest equity market investor in Life Insurance Corporation of India, booked profit in over 70 companies and raised stake in 35 companies during the fourth quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X