டெல்லி : இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையதள பயன்பாடானது வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வாறு பயன்படுத்தும் இணையதள பயன்பாட்டில் எது அதிகளவில் தேடப்பட்டது என்பது குறித்த ஆய்வறிக்கையை கூகுள் வெளியிட்டுள்ளது.
இதன் படி, கூகுள் பயன்பாட்டில் சிறிய நகரங்கள், மெட்ரோ அல்லாத நகரங்கள் தான் இணையதளங்களில் தேடுதல் மற்றும் செயல்பாடுகளையும் கருத்தில் கொள்கின்றனவாம். இவ்வாறு தேடப்பட்ட அறிக்கையை Google titled Year in Search என்ற ஆய்வு அறிக்கையையின் மூலம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு இணையதளத்தின் மூலம் தேடப்படுவதில் 400 மில்லியன் இணையதள பயனாளர்களில், 350 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் மூலம் தேடுகின்றனராம். இதோடு வருடத்திற்கு சராசரியாக 40 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் இன்டர்நெட் வாடிக்கையாளர்களாக அதிகரித்தும் வருகின்றனராம்.
இவற்றில், மெட்ரோ நகரத்தில் அல்லாதவர்களிடையே நுகர்வோர் காப்பீடு, அழகு பற்றிய தகவல்களை பெறுவறுவதற்காக தேடப்படுகிறதாம். மெட்ரோ நகரங்களில் உள்ளவர்களை விட அதிகமாக மெட்ரோ அல்லாதவர்களே இதில் அதிகம் தேடுகின்றனராம்.
இதுவே சிறிய நகரங்களில் இருந்து 70% மேல் ஸ்மார்ட்போன்களை பற்றிய தேடல்களே அதிகரித்துள்ளனவாம். இதே 61% பேங்கிங் அண்ட் பைனான்சியல் தொடர்பாக தேடியுள்ளனராம்.
இதே மெட்ரோ அல்லாத நகரங்களில் 55% வாகனங்கள் பற்றி தேடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் ஆன்லைன் சேவை இன்னும் அவ்வளவு துடிப்பானதாக இல்லை, இந்தியாவில் தற்போதுதான் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் கூகுள் இந்தியாவின் இயக்குனர் விகாஸ் அக்னிஹோத்ரி கூறியுள்ளராம்.
இதோடு இந்தியாவில் ஆன்லைனில் வீடியோ தேடல் அதிகரித்து வருகிறதாம். அவ்வாறு பார்க்கப்படும் வீடியோவில் மூன்றில் ஒரு பங்கு பொழுதுபோக்காகவே உள்ளதாம். எனினும் ஒரு நாளைக்கு மில்லியன் பயனாளர்களாவது உபயோகமாக ஏதேனும் கற்றுக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம். இவ்வாறு இணையதளத்தில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2020ல் 500 மில்லியன் களாக அதிகரிக்குமாம்.
இதுவே அறிவியல் தொடர்பான வீடியோக்களும், ஹாபி தொடர்பான வீடியோக்களும் பார்ப்பது கடந்த 2018ல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாம். இதே யூடியூபில் அழகு குறிப்புகள் தேடல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாம். மொத்தத்தில்அழகு தொடர்பான தேடல்கள் கடந்த 2018ல் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.
பொருளை வாங்குவதற்கு முன்பு ஆன்லைனில் வீடியோவாக பார்ப்பது அதிகரித்துள்ளதாம்.அவ்வாறு பார்க்கப்பட்டதில் கார் வாங்குவோர்கள் 80% இதைப் பார்த்து தான் ஆராய்ச்சி செய்கிறார்களாம். ஏன் கடைகளிலேயே 55% வீடியோக்கள் மூலம் விற்பனை செய்கின்றனராம்.
இதில் இந்தியாவில் சிறிய நகரங்களிலும்,பெரிய நகரங்களிலும் தேடப்படும் ஒன்று உணவு, அதுவும் இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக பீட்சா உள்ளதாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications