இங்கிலாந்து வங்கிக்கு ஆளுநராகும் இந்தியர்.. ரகுராம் ராஜன் தான் சிறந்த போட்டியாராம்

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன், அடுத்து பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஆண்டு ரகுராம் ராஜன் விண்ணப்பிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக இருக்கும் மார்க் கார்னிக்குப் பின்னர், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்கால ஆளுநராக ஆய்வாளர்களால் ரகுராம் ராஜன் குறிப்பிடபட்டிருந்தாராம்.

இங்கிலாந்து வங்கிக்கு ஆளுநராகும் இந்தியர்.. ரகுராம் ராஜன் தான் சிறந்த போட்டியாராம்

இது தற்போது உண்மையாகும் விதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ரகுராம் ராஜன் முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில், சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனக்கு மிகவும் நன்றாக வேலை இருக்கிறது, அதோடு நான் ஒரு கல்விசார் நிபுணர், ஒரு தொழில்முறை மத்திய வங்கியாளர் அல்ல.இதனால் நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கடந்த ஆண்டு லண்டனில் நடந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ராஜன் கூறியிருந்தார்.

கடந்த செப்டம்பர்- 2013 மற்றும் செப்டம்பர் -2016 ஆம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் 23 ஆளுநராக இருந்தவர் தான் ரகுராம் ராஜன். ஆனால் இவர் தற்போது சிகாகோ பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராக இருக்கிறார். அதோடு கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனராகவும் ரகுராம் ராஜன் பொறுப்பு வகித்தார். இதனிடையே 2007 - 2008 உலக நெருக்கடிக்கு இடையிலான நிதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி தெரிந்து கொண்டவரும் ஆவார்.

மேலும் கனடாவைச் சேர்ந்த கார்னி, கடந்த ஜூலை 1, 2013 அன்று தனது பதவியை எடுத்துக் கொண்ட, இங்கிலாந்து நாட்டின் முதல் வெளிநாட்டு கவர்னர் ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி அவர் பதவி விலகுவாராம்.

இதுவே ரகுராம் ராஜனின் தாரக மந்திரமாம். பொருளாதாரத்தில் ஏதேனும் சிக்கலான சூழல் ஏற்படும் அபாயம் இருந்தால் அதனை முங்கூட்டியே சொல்லி வைக்க வேண்டியது ஆர்.பி.ஐ கவனரின் கடமை. ஆர்.பி.ஐ கவனர் என்பவர் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் சில நேரங்களில் இந்த முடிவுகள் மற்றவர்களுக்கு விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் பின்னர் எல்லோருக்கும் உதவும் வகையில் பொருளாதாரம் இருக்கும். ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+