எல்லா பயலுக்கும் நட்டம் தான்.. ஏர்டெல், வோடபோன் தொடர்ந்து வீழ்ச்சி.. அமெரிக்க வங்கி தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : தொலைதொடர்பு துறைக்கு இது போதாத காலமே. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதோடு போட்டி போட்டுக் கொண்டு ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான கட்டணக் குறைப்புகள், கேஷ் பேக் ஆபர்கள், கிப்ட் வவுச்சர்கள், கூப்பன்கள் என வாடிக்கையாளர்களை சலுகை மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றன.

 

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலேயே குறியாய் இருக்கும் நிறுவனங்கள், லாபத்தைக் குறி வைக்காமல் நடத்தும் இந்த நாடகத்தில் யார் ஜெயிப்பார்கள். இந்த சந்தை யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
இது குறித்து தற்போது பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் (Bank of America Merrill Lynch) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயமே என்றாலும் பாரதி ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தையே அடைந்து வருகின்றன.

உணவுப்பொருட்கள் விலை உயர்வு - ஏப்ரல் மாத பணவீக்கம் 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிக்குமாம்

மற்ற நிறுவனங்கள் பாதிக்கும்

மற்ற நிறுவனங்கள் பாதிக்கும்

இதோடு ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து அதன் ஆஃபர்களையும் சலுகைகளையும் அதிகரிக்கும் போது அது, மற்ற நிறுவனங்களான வோடபோன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. ஆனால் இன்னும் அதிகரிக்கும் சூழ் நிலையே நிலவி வருகிறது.

ஜியோ நிறுவனம் தனது 4ஜியை 99% ஃபோகஸ்

ஜியோ நிறுவனம் தனது 4ஜியை 99% ஃபோகஸ்

இதோடு பாரதி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டு சந்தாதாரர்களையும் நெட்வொர்க்கையும் மேம்படுத்த நினைக்கின்றனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் தனது 4ஜி பயன்பாட்டை 99% சதவிகிதம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நினைக்கிறது. இதனால் மற்ற நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கக் கூடிய இடத்திலேயே இருக்கின்றன என்றும் கூறியுள்ளதாம்.

வோடபோன்-ஐடியா இணைப்பு கைகொடுக்கலாம்
 

வோடபோன்-ஐடியா இணைப்பு கைகொடுக்கலாம்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து வரும் அதே நிலையில் தான், இணைய வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதே மற்றொரு தரகில், ரிலையன்ஸ் ஜியோ அதிகப்படியான முதலீட்டின் மூலம் வாடிக்கையாளர்களை தன் பால் ஈர்த்து வருகிறது. இதே மற்ற சிறிய நிறுவனங்கள் தனது சேவை மூலம் வாடிக்கையாளர்களை அதிகரித்து வருகின்றன.

ஜியோவிற்கு ஆப்பு வைக்க ரெடியாகும் வோடபோன்

ஜியோவிற்கு ஆப்பு வைக்க ரெடியாகும் வோடபோன்

இந்த பிரச்சினைக்களுக்கு மத்தியில் வோடபோன் நிறுவனம் ஐடியாவுடன் இணைந்தும், மற்றும் பல நிறுவனங்களுடனும் இணைந்து, ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக தனது சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறது.

முதலீட்டுடன் வருமானத்துக்கும் வழி

முதலீட்டுடன் வருமானத்துக்கும் வழி

அதேசமயம் ரிலையன்ஸ் முதலீட்டில் கவனம் கொண்டாலும் ஒரு புறம் வருமானத்துக்கு உண்டான வழியையும் செய்து வருகிறது. ஏனெனில் வெளிப்புறத்தில் எந்த முயற்சியும் எடுக்காதது போல் தோன்றினாலும் உள்ளடக்கம் பணமாக்குவதில் கவனம் வேகத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆக ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே JioSaavn மற்றும் பிற பயன்பாடுகளைப் பணமாக்க திட்டமிட்டுள்ளது.

ஏர்டெல் – ஜியோ சேவை குறையலாம்

ஏர்டெல் – ஜியோ சேவை குறையலாம்

இதே 2020ம் நிதியாண்டில் பாரதி ஏர்டெல் சேவை குறையலாம் என்றும், அட்ஹோடு ஜியோவின் சேவையும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். இதே வோடபோன் இந்த சேவையில் பெரிதொரு மாற்றமின்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏர்டெல்லும் ஜியோவும் மற்ற துறையில் கவனம்

ஏர்டெல்லும் ஜியோவும் மற்ற துறையில் கவனம்

ஏனெனில் பாரதி ஏர்டெல்லும் ஜியோவும் தற்போது பங்குச் சந்தை மற்றும் நிலையான வர்த்தகங்களிலும், மற்ற வணிக நிறுவனங்களின் மீது கவனம் செலுத்துவதும் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் அதிகரித்துள்ளதாம்.

டாரிப்களை மாற்றினால் ஜியோவுக்கு சாதகம்

டாரிப்களை மாற்றினால் ஜியோவுக்கு சாதகம்

மேலும் எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் தற்போது டாரிப்களை மாற்ற முடியாது என்றும், அவ்வாறு மாற்றினால் அது அந்தந்த நிறுவனங்களையே பாதிக்கும் என்றும், அதோடு ஜியோவிற்கு முக்கியத்துவம் அதிகரித்துவிடும் என்றும் மற்ற நிறுவனங்கள் கருதுகின்றன.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்கும் ஜியோ

ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்கும் ஜியோ

இதோடு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க நினைக்கிறது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களிடையே சந்தாவை அதிகரிக்க நினைக்கவில்லை, அதோடு பணமாக்குதலுக்கு மாறாக சந்தாதாரர்களிடையே ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை அதிகரிப்பதாகவும் தொடர்ந்து இவ்வாறு ஆஃபர்களை வழங்கி வருகிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharati airtel, Vodafone will continue to face revenue share loss

Reliance Jio momentum will continue on the back of its wider 4G coverage and cheaper tariffs, even as Bharti Airtel and Vodafone India Ltd continue to face the risk of continued revenue market share loss, a report by Bank of America Merrill Lynch
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X