கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்

நியூயார்க் : கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் எப்போதும் மூன்றாவது நபருக்கு விற்பனை செய்யாது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுள் சமூக வலைதளம் மூலமாக அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் நபர்களுக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. இந்த நிலையில் கூகுள் இது போன்ற எந்த தகவலையும் ஒருபோதும் விற்காது என அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு  பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் சொகுசுப் பொருட்கள் கிடையாது. அவற்றை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. தனியுரிமை என்பது தற்போதுள்ள விவாதிக்கப்படும் தலைப்புக்களில் முக்கிய ஒன்றாக இடம்பிடித்துள்ளது. தனியுரிமையை உண்மையானதாக இருப்பதற்காக உங்கள் தரவுகளை சுற்றி தெளிவான தேர்வுகளை நாங்கள் வழங்கி வருகிறோம். ஆக இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். ஒருபோதும் கூகுள் வாடிக்கையாளர்களின் தகவல்களை விற்காது.

கூகுள் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்யாது, அதோடு உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்வது ஆகிய இரண்டு மட்டுமே கூகுளின் வெளிப்படையான கொள்கையாக இருக்கும் போது இது தவறான கருத்தாகும்.

ஒரு குடும்பம் இன்டெர்நெட்டை ஒரு கருவி மூலமாக பகிரும்போது தனியுரிமை என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடமும் செல்கிறது. ஒரு சிறு தொழில் செய்யும் உரிமையளார் கிரெடிட் கார்டு சேவைகளை வழங்குவதற்கு விரும்பும்போது தனியுரிமை என்பது வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு என மாறுகிறது. ஒரு இளைஞர் தனது செல்பியை பகிர்ந்து கொள்ளும்போது தனியுரிமை என்பது எதிர்காலத்தில் அந்த புகைப்படத்தை அழிப்பது வரை இருக்கிறது. ஆக இது போன்ற தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தான் உள்ளது என்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தனியுரிமை பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுவதற்கு கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு சட்டம் உதவியாக இருக்கும். ஆனால் நாங்கள் அதற்காக காத்திருக்கவில்லை. வழிநடத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளாராம். ஆக கூகுள் ஒரு போதும் இதுபோன்ற செயலை செய்யாது என்றும் அறிவித்துள்ளாராம் சுந்தர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+