டெல்லி: பி.என்.பி ஹவுஷிங் பைனான்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இதன் நிகரலாபம் 51% அதிகரித்ததையடுத்து பங்கு சந்தையில் இதன் பங்குகள் 13% அதிகரித்தது.
இதில் பி.எஸ்.இயில் 12.08% ஆக உயர்ந்து 782.35 ஆக முடிவடைந்தது. ஆனால் இதுவே இன்றைய நாளில் 13.57% வரை 792.80 ஆக உயர்ந்துள்ளது. இதுவே என்.எஸ்.யில் பங்குகள் 12.80% வரை உயர்ந்து ₹790 ஆக முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 51 சதவிகிதம் உயர்ந்து ரூ. 379.77 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 251.58 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருமானம் 31 சதவிகிதம் உயர்ந்து 2,148.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,638.48 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
கடந்த 2019 மார்ச் -31ம் தேதி 2019 மார்ச் காலாண்டில் 0.48 சதவிகிதமாக மொத்த செயற்படாத சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு மார்ச்2018ல் (NPA) செயற்படாத சொத்துகளின் மதிப்பு 0.33 சதவிகிதமாக இருந்துள்ளது.
கடந்த 2018 - 2019 நிதியாண்டில் நிகர வட்டி வருமானம் ₹ ரூ.2,063.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 1,059.9 கோடியாக இருந்தது கவனிக்கதக்கது. இது சுமார் 24% வளர்ச்சியையும் பதிவு செய்ததுள்ளது.
இதே வரிக்குப் பின்னரான இலாபம் 42% உயர்ந்து 1,191.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 841.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதே நேரத்தில்2018 - 2019ல் கடன்களும் 2.35% ஆக குறைந்துள்ளது. இதுவே 2017 - 2018ல் 2.54% ஆகவும் இருந்துள்ளது.
இதோடு நிகர வட்டி விகிதமானது 2.93% மாகவும், இது இதற்கு முன்னர் 3.19% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நெட்வொர்த் ரூ.7,543.9 கோடியாக இருந்தது. இதே நிர்வாகத்தின் கீழ் சொத்து மதிப்பு ரூ. 84,721.9 கோடி.
இதற்கு காரணம் போதுமான பணப்புழக்கம், செயற்படாத சொத்துகளின் மதிப்பு மேலாண்மை, திறமையான செயற்பாடுகள் மற்றும் வலுவான சொத்து தரத்தை பராமரிப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தியதும் தான் இதற்கு காரணம் என்கிறது இந்த வங்கி. இது அனைத்து வர்த்தக மற்றும் நிதி துறைகளிலும் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications