பொருளாதார மந்தநிலை : உயரும் பணவீக்கம் - ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொருளாதார மந்த நிலை நீடிப்பதாலும், அடுத்து வரும் மாதங்களில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்பதாலும், வரும் ஜூன் மாதத்தில் மீண்டும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஐஎச்எஸ் மார்கிட் ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

 

நடப்பு வருடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 0.25 சதவிகிதமும், ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாக 0.25 சதவிகிதமும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அடுத்து வரும் ஜூன் மாதத்தில் வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதுவே நடப்பு வருடத்தின் இறுதி வட்டி குறைப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை : உயரும் பணவீக்கம் - ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்குமா?

உலகளாவிய அளவில் தற்போது பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து ஏறிக்கொண்டெ செல்கிறது. போதாக்குறையாக நாம் இதுவரையிலும் ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணெய்க்கும் தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்

ஈரான் கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டாலும் தற்காலிக நிவாரணமாக வரும் ஜூன் மாதம் வரையிலும் அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா இடைக்கால அனுமதி அளித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.

பொருளாதார மந்தநிலை : உயரும் பணவீக்கம் - ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்குமா?

தற்போது லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் 23ஆம் தேதியன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் பின்னர் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என்பது அனைவரின் கணிப்பாகும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த கதியிலேயே இருந்துவருகிறது. மேலும் தொழில் துறை வளர்ச்சி விகிதம், மொத்த பணவீக்க விகிதமும் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.

 

கோடை மழையும் விவசாயிகளை கைவிட்டதால் விவசாய விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமும் பணவீக்க விகிதத்தில் எதிரொலிக்கக்கூடும். தொடர்ந்து பணவீக்க விகிதமும் வரும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உத்தேசித்தே வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என்று ஐஎச்எஸ் மார்கிட் (IHS Markit) நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் மாதங்களில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து அதனையொட்டி வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் அது ரிசர்வ் வங்கிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கக்கூடும்.

ஒருவேளை புதிய ஆட்சியிலும் தற்போதைய நிதிக்கொள்கையே தொடரும் பட்சத்தில், முன்கூட்டிய கணித்து எடுக்கப்பட்ட வட்டி குறைப்பு நடவடிக்கையானது அடுத்து வரும் 6 மாதங்களை சமாளிக்கு உதவக்கூடும் என்று ஐஎச்எஸ் மார்கிட் ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் எடுக்கப்படும் நிதிக்கொள்கை நடவடிக்கை மற்றும் பொருளாதார தாக்கத்தினால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ரிசர்வ் வங்கி 2020ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு பருவத்திற்கான பொருளாதார கொள்கைகளில் கடுமை காட்டும் எனவும் ஐஎச்எஸ் மார்கிட் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருட்களின் மீதான விலை உயர்வு நடப்பு 2019ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பருவத்தில் அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து பணவீக்க விகிதமும் 5 சதவிகிதத்தை தாண்டும் என்றும் மேலும் நடப்பு 2019ஆம் ஆண்டில் பணவீக்க விகிதம் சராசரியாக சுமார் 4.2 சதவிகிதமாகவும், பின்னர் 2020ஆம் ஆண்டில் சுமார் 5.3 சதவிகிமாகவும் இருக்கக்கூடும் என்றும் ஐஎச்எஸ் மார்கிட் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் முதல் தடவையாக வட்டி விகிதத்தில் 0.25 புள்ளிகளையும், பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் முறையாக 0.25 புள்ளிகளையும் குறைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது ரெப்போ வட்டி விகிதம்6 சதவிகிதமாக உள்ளது. ஒருவேளை ஜூன் மாதத்திலும் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டால் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதிவிகிதமாக குறையக்கூடும். மேலும் நடப்பு ஆண்டில் இதுவே கடைசி வட்டி குறைப்பாகவும் இருக்கும் என்று ஐஎச்எஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI Monetary Policy may cut another 0.25 points in June

HS Markid Research Institute has stated that there is a possibility of an interest rate cut again in June, due to the continuing economic slowdown at home and internationally and the inflation rate may continue to rise in subsequent months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X