38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி

38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதிடெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சவுத் இந்தியன் வங்கி 38% லாபம் குறைந்து, 70.51 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 114.10 கோடி ரூபாயாக இருந்தது. எப்படியெனினும் கடந்த மார்ச் காலாண்டில் செயல்பாட்டு லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து 328 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 311 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி

இதே வங்கியின் வட்டி வருமானம் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1,790.94 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,588.98 கோடி ரூபாயாக உள்ளது.

இதே மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வருவாய் ரூ. 2,026.59 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 1,767.65 கோடி ரூபாயாக இருந்தது.

இதற்கு காரணம் கார்ப்பரேட் அல்லாத மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 250 கோடி ரூபாயாகவும், இதே விவசாய மூலம் 100 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே கார்ப்பரேட்களின் வாராக்கடன் விகிதம் 114 கோடி ரூபாயாகவும் உள்ளது.

38% நிகரலாபம் வீழ்ச்சி.. வரும் காலாண்டுகளில வாராக்கடனை குறைக்க இலக்கு.. சவுத் இந்தியன் பேங்க் உறுதி

இதே கடன் வளர்ச்சி வாய்ப்புக்களைப் பொறுத்த வரையில், வங்கி 20 சதவிகிதம் வளர்ச்சியை இலக்காகக் கொண்டது, அதற்காக எல்லாமே இடம் பெற்றது. இதே சில்லறை விற்பனையின் 29 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றது.

இதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக வங்கி பல விதமான அழுத்தங்களில் இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் இனி வரும் காலாண்டுகளில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பெரிய நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சில மரபு சிக்கல்கள் உள்ளது, ஆனால் இதுவே சிறு குறு நிறுவனங்களைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏதும் இல்லை. இருப்பினும் வங்கி தற்போது நிலையான வளர்ச்சியின் கீழ் உள்ளது. எனினும் அடுத்த காலாண்டில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் இந்த வங்கி எதிர்பார்க்கிறதாம். அதோடு வாராக்கடங்களின் அளவும் குறையுமாம்.

இதோடு நடப்பு நிதியாண்டில் 300 - 400 வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், இதை நடப்பு நிதியாண்டில் வேலைக்கு ஆட்களை சேர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+