சென்னை : கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Sovereign Gold Bond முதல் வெளியீட்டின் மூலம் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 30% மேலான அழகான லாபத்தை பெற்றுள்ளனர்.
எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மார்கெட்டிங் உள்ளிட்ட மற்றும் பணப்புழக்கம் காரணமாக இந்த தங்க பத்திரங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. குறிபபாக இந்த இரு ஆண்டுகளில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இந்த பத்திரம்.

Sovereign Gold Bond கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு கிராமின் தொடக்க விலையானது ரூ. 2,684 விலையில் வழங்கப்பட்டது. அதோடு ஒப்பிடுகையில், கடந்த 2019 பிப்ரவரி மாதம் கடைசியில் வெளியிடப்பட்ட தங்க பத்திரத்தின் விலை 3,326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது இந்த நான்கு ஆண்டுகளில் இந்த விலை ஏற்றம் சுமார் 23.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்த தங்க பத்திரம் வெளியிடப்பட்டபோது, ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இது 2.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. பத்திர மதிப்பு உயர்வு மற்றும் இந்த வட்டி விகித்தையும் சேர்த்து கணக்கிட்டால் தங்க பத்திரத்தின் மதிப்பு ஏறக்குறைய தற்போது 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 27 பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கடைசியாக பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட தங்க பத்திரம், கிராமுக்கு ரூ.3,326 என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், 'முதலில் 2 பில்லியன் டாலர் மதிப்பு வரை மட்டும் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு உத்தேசித்திருந்தது. இதுவரை 24.84 டன் அளவுக்கு பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
தங்க பத்திரங்களை மத்திய அரசு முதன் முதலாக வெளியிட்டபோது, இதை வாங்க பலர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், 2017-18 நிதியாண்டில் ஒவ்வொரு பத்திர வெளியீட்டின்போதும் சுமார் 2 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதோடு தங்க நாணய மயமாக்கல் திட்டங்கள் மற்றும் இந்திய தங்க நாணயத் திட்டத்தில் சாத்தியமுள்ள திருத்தங்கள், தங்கம் பத்திர சந்தையில் அதிக தெளிவு, இதோடு மார்கெட்டிங் துறையால் ஏற்படும் தெளிவு இன்னும் வரும் காலங்களில் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications