பெங்களுரூ: இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வரும் மே 15 முதல் 19 வரையில் " பிக் ஷாப்பிங் டே " என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக பல ஆஃபர்களை வழங்க உள்ளதாம் இந்த நிறுவனம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் ஏற்கனவே சம்மர் ஸ்பெஷல் விற்பனையையும் செய்தது. இதில் எண்ணற்ற பொருட்களுக்கு விலை குறைப்பும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வரும் 15ம் தேதி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்க இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை மே19ம் தேதி வரையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் என்றும், இந்த ஆஃபரில், ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேகமாக தள்ளுபடி உண்டு என்றும் அறிவித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட சலுகைகளின் படி, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டி.வி.க்கள், கேமராக்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு மின்னணு பொருட்களுக்கு ஒரு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
Flipkart Big Shopping Days 'டீஸர் பக்கத்தில் விற்பனையின் போது சில மொபைல் போன்கள் எப்போதும் இல்லாத குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதாம். அதோடு இந்த நிறுவனம் முழுமையான மொபைல் பாதுகாப்புக்கு குறித்த பொருட்கள் ரூ.9யிலிருந்து தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் மேற்கண்ட இந்த சலுகைகள் மட்டும் அல்லாது ஹெச்.டி.எஃப்.சி டெபிட் அல்லது கிரெடி கார்டில் இந்த பொருட்களை வாங்கும் போது கூடுதலாக 10% ஆஃபர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக ஐபோன் எக்ஸ்.ஆர், நோக்கியா 5.1, ஹானர் 10 லைட்,ரெட்மி நோட் 7 , நோக்கியா, ரியல்மி, ரெட்மி, சாம்சங், ஹானர், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டும் அல்லாது கேமரா, லேப்டாப் என பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர் வழங்கப்படுகிறதாம்.
இதுவே முன்னதாக பிளிப்கார்ட் சம்மர் சேலில், கூகுள் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர், கூகுள் மினி ஹோம், அமேசான் எக்கோ ஆகியவற்றுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications