இந்தியா மோதும் அனைத்து போட்டிகளையும் காண இந்தியாவிலிருந்தும் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பறப்பார்கள். இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோத
மும்பை: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைக் காண வருகை தரும் பார்வையாளர்களில் இந்தியர்களின் பங்குதான் அதிக அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் ஜூன் 16ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதும் போட்டியைக் காணவே அதிக அளவில் இந்திய ரசிகர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் திருவிழாவான 12ஆவது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு இன்னும் 19 நாட்களே உள்ளன, இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி நடைபெறும் ஜூலை 14ஆம் தேதி வரை அனைத்து போட்டிகளைக் காண உலகமெங்கும் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்களும் பார்வையாளர்களும் இங்கிலாந்துக்கு படையெடுப்பார்கள்.

அதிலும் இந்தியா மோதும் அனைத்து போட்டிகளையும் காண இந்தியாவிலிருந்தும் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பறப்பார்கள். குறிப்பாக வரும் ஜூன் 16ஆம் தேதி அன்று இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதும் போட்டியைக் காண கூடுதல் ரசிகர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மோதும் போட்டிகளைக் காண மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர்களை வரக்கூடும் என்று இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியைக் காண மட்டும் குறைந்தது 77 ஆயிரம் பேர்கள் வரை வரக்கூடும். இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கி 48 மணிநேரத்தில் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் விளம்பர வருவாய் என்பது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் இந்திய விளம்பர நிறுவனங்களை நம்பியே உள்ளன. அதனால் தான் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப் மற்றும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை என அனைத்திலிருந்தும் கிடைக்கும் வருவாய் என்பது இந்திய விளம்பர நிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பை மட்டுமே நம்பியுள்ளன.
ஐசிசி நடத்தும் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஹைலைட்ஸ் என அனைத்து உரிமையையும் சுமார் 11 ஆயிரத்து 880 கோடி ரூபாய்க்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கி வைத்துள்ளது.
இதன்மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வரும் 2023ஆம் ஆண்டு வரை ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை ஆண்கள் கிரிக்கெட், உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட், சேம்ப்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் என 8 ஆண்டுகளுக்கு ஐசிசி நடத்தும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பும்.
இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைக் காண இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் விசா விண்ணப்பங்கள் வருகின்றன. அவை அனைத்தும் 15 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டு விசா வழங்கப்படுகின்றன என்று இங்கிலாந்து தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைக் காண பெரும்பாலானவர்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டதால் மாற்று ஏற்பாடாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications