பாஜக ஆட்சியில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சரிவு - மத்திய புள்ளியியல் துறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றான தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மார்ச் மாதத்திய தொழில் துறை உற்பத்தி விகிதம் 0.1 சதவிகிதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தரவுகள் (Data) தெரிவிக்கின்றன.

 

ஏப்ரல் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டிருந்தது. இப்போது மார்ச் மாதத்தின் தொழில் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதமும் சரிந்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அடுத்தடுத்து வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிர்மறையாகவே வந்துகொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கும் முன்பு பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் பணவீக்க விகிதம், வேலை வாய்ப்பு புள்ளி விவரம் என அனைத்தும் ஆளும் கட்சிக்கு சாதகமாவே எதிர்மறையாகவே வந்து கொண்டிருக்கின்றன.

அவசர விமான பயணமா? ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி

உணவுப்பொருட்கள் விலை உயர்வு

உணவுப்பொருட்கள் விலை உயர்வு

முதலில் கோடை மழை பொய்த்துப் போன காரணத்தினால் விவசாய விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மொத்தப் பணவீக்க விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 மாதங்களில் இல்லாத அளவில் உயரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

அடுத்ததாக வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துவிட்டதாகவும் ஏப்ரல் மாதத்தில்7,6 சதவிகிதமாக கூடிவிட்டதாகவும் மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளை வெளியிட்டிருந்தது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி
 

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி

இப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணியான தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் 0.10 சதவிகிதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை (Central Statistical Office) தரவுகளை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளக்கும் அளவுகோலாக தொழில் துறை இருந்து வருகிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைப் பொருத்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியும்.

மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி

மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை என்பது சுரங்கத்துறை, உற்பத்தித்துறை, மின் உற்பத்தி என மூன்று துறைகளை உள்ளடக்கியதாகும். மார்ச் மாதத்திய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.10 சதவிகிதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை (CSO) நேற்று தரவுகளை வெளியிட்டுள்ளது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில துறையின் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டதால் 1.20 சதவிகிதம் கூடியது.

சுரங்கத்துறை உற்பத்தி

சுரங்கத்துறை உற்பத்தி

தொழில் துறையின் அங்கமான சுரங்கத் துறையின் உற்பத்தியானது கடந்த மார்ச் மாதத்தில சுமார் 0.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில சுமார் 2 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சாரத்துறை

மின்சாரத்துறை

மின்சாரத்துறையானது கடந்த மார்ச் மாதத்தில் 2.2 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியானது 8.7 சதவிகிதம் சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என புள்ளியியல் துறை தெரிவிக்கிறது.

தயாரிப்புத்துறை வளர்ச்சி சரிவு

தயாரிப்புத்துறை வளர்ச்சி சரிவு

தொழில்துறையின் மற்றொரு முக்கிய அங்கமான தயாரிப்புத் துறையின் வளர்ச்சியானது 0.4 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம் மூன்று வருட குறைந்த அளவான 3.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 4.4 சவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Industrial Output slowdown for the first time in last 2 yrs

India’s Industrial production data released by Central Statistical office on yesterday. The data shows, falling for the first time in 2 yrs, mainly manufacturing sector production slow down, official data released by CSO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X