ஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் தலைமையிடமாகக் கொண்ட செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனமே ஐ.டி.சி ஆகும். இது கடந்த 1910 ஆம் ஆண்டில் 'இம்பீரியல் டெபாக்கோ ஆப் இந்தியா லிமிடெட்' என்ற பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் 1970 ஆம் ஆண்டில் India Tobacco Company Limited என மறுபெயரிடப்பட்டது. இதற்கு பின்னர் மீண்டும் 1974ல் I.T.C என்று மாற்றப்பட்டது.

 

சிகரெட் தொழிலையே பிரதான தொழிலாக கொண்ட இந்த நிறுவனத்தின் நீண்ட கால தலைவராக இருந்தவர் தான். ஒய்.சி. தேவேஷ்வர். இவருக்கு 72 வயது ஆகிறதாம். இந்த நிலையில் சில ஆண்டுகளாக உடல் நிலையால் பாதிக்கப்பட்ட அவர் இன்று ஐ.டி.சியையும் உலகத்தையும் விட்டு சென்றது அனைத்து மக்களுக்கு ஒரு பேரிழப்பே. குறிப்பாக கார்ப்பரேட் உலகில் இது மிகப்பெரிய இழப்பே.

இந்தியாவில் மிக நீண்ட கால சேவை நிறுவனமான ஐ.டி.சி யில் 1996-ம் ஆண்டு மிக மோசமான நெருக்கடியை சந்தித்தபோது, தேவேஷ்வர் தான் இந்த நிறுவனத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டாராம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் பறக்கிறார்கள் - வருமானத்தை அள்ளும் இங்கிலாந்து..!

நஷ்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேவேஷ்வர்

நஷ்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேவேஷ்வர்

இந்த நிலையில் தேவேஷ்வரின் பன்முகமான முயற்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் மிகப் பெரிய எதிர்ப்பை கிளப்பியது. இருப்பினும் தனது அயராத முயற்சியினால் இரண்டு ஆண்டுகளுக்குள் இழப்புகளை ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தாராம். அதோடு நஷ்டத்தை தரும் சமையல் எண்ணெய் மற்றும் நிதி சேவைகள் வர்த்தகத்திலிருந்தும் வெளியேறினார்.

ஐ.டி.சி புதிய புதிய துறைகளில் கால் பதித்தது.

ஐ.டி.சி புதிய புதிய துறைகளில் கால் பதித்தது.

அதோடு நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தலைவரும் ஆனார். அந்த சமயத்தில் ITC மீண்டும் புதிய வணிக பிரிவுகளில் நுழைய முயன்றது. குறிப்பாக காக்டெய்ல் தயாரிப்புகளுடன் தொடங்கியது. அதோடு விரைவில் உணவு போன்ற துறைகளிலும் கால் பதித்தது.

ஐ.டி.சிக்கு 10 மடங்கு லாபம்
 

ஐ.டி.சிக்கு 10 மடங்கு லாபம்

அந்த சமயத்தில் இவரது தலைமையின் மூலம், ஐடிசி நிறுவனத்தின் வருவாயானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 5,200 கோடி ரூபாயிலிருந்து 51,500 கோடி ரூபாயாக உயர்ந்ததாம். அதே நேரத்தில் பங்குதாரர்களின் வருமானமும் 23.3% என்ற விகிதத்தில் பங்குதாரர்களுக்கு கிடைத்ததாம்.

தேவேஷ்வருக்கு பத்ம பூஷன்

தேவேஷ்வருக்கு பத்ம பூஷன்

இந்த நிலையில் 2011 ஜனவரியில், தேவேஷ்வருக்கு சிறந்த சேவைக்கான பத்ம பூஷன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதும் கவனிக்கதக்கது.

தேவேஷ்வரை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்

தேவேஷ்வரை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்

சிஐஐ தலைவரான விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில், தேவேஷ்வர் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுடனான வேலையிலும், அதன் மூலம் அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். இதைச் செய்வதன் மூலம் புதிய வழிகளில் தொழில்நுட்பத்தை, விவசாயம் மற்றும் தொழிற்துறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய மாதிரிகளை அவர் அறிமுகப்படுத்தினார். இதுபோன்ற கருத்துகளை அவர் செய்த அனைத்து செயல்களிலும் புகுத்தினார். ஆக இனி ஒவ்வொரும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: itc ஐடிசி
English summary

ITC's longest-serving chairman Deveshwar passes away

Y C DEVASHWAR chairman of ITC group passed away on Saturday. He was 72. One of India’s longest-serving corporate chiefs
Story first published: Saturday, May 11, 2019, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X