அப்பா இடத்தை பிடிக்கும் மகள்.. ஜோதி லேபாரட் டரீஸ் MD-யாக ஜோதி நியமனம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அடுத்த ஆண்டு முதல் ஜோதி லேபாரட் டரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, தற்போதுள்ள எம்.ஆர். ராமசந்திரன் மகள் எம்.ஆர்.ஜோதி இருப்பார் என்றும், இந்த நியமனம் அடுத்த ஆண்டு ஏப்ரல்1,2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

 

ஜோதி கடந்த 14 ஆண்டுகளாக தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக இருந்தாராம். அதோடு இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா இடத்தை பிடிக்கும் மகள்.. ஜோதி லேபாரட் டரீஸ் MD-யாக ஜோதி நியமனம்

இந்த நிலையில் இது குறித்து இந்த நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் எம்.ஆர்.ராமசந்திரன் கூறுகையில், அடுத்த தலைமுறை பொறுப்பேற்க தயாராக உள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் மகள் எம்.ஆர்.ஜோதி நிர்வாக இயக்குனராக இருப்பதால் நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளது என்றும் பெருமையுடன் கூறியுள்ளாராம்.

எஸ்.பி.ஐ கடனுக்கான வட்டிவிகிதம் குறைப்பு.. இந்த மாத இ.எம்.ஐ குறையுமா?

இதுகுறித்து மற்ற நிறுவனங்கள் கூறுகையில் ஜோதிக்கு மார்க்கெட்டிங் மற்றும் பிராண்ட் கம்யூனிகேஷனில் நல்ல அனுபவம் உண்டு. மேலும் மற்ற பிராண்ட்களை ஒருங்கிணைப்பதில் ஜோதியின் பங்கு முக்கிய பங்காக இருக்கும். குறிப்பாக Henko, Pril and Margo போன்ற முந்தைய கொள்முதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பதவியேற்கும் ஜோதி இது குறித்து கூறுகையில், இப்படியொரு வாய்ப்பை எனக்கு வழங்கியதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நான் எனது முன்னுரிமைகளை பவர் பிராண்ட்களுக்கு கவனம் செலுத்துவேன். இதோடு புதுமையை புகுத்துவதோடு வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளராம் ஜோதி.

ஜோதி லேபாரட் டரீஸ் நிறுவனம் தற்போது துணி பராமரிப்பு, டிஷ்வாஷ், வீட்டு பூச்சிக்கொல்லி உள்ளிட்ட பொருட்களில் தனிப்பட்ட கவனம் செலுத்து வருகிறது.

மும்பையை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தின் கடந்த 2018 - 2019ம் ஆண்டு வருமானம் 1768.88 கோடி ரூபாயாக உள்ளது. அதோடு இந்த நிறுவனம் உஜாலா, மேக்ஸோ, எக்ஸோ, ஹென்கோ, பிரில், நீம் செக் அன்ட் மிஸ்டர் வெயிட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வருகிறது.

 

மேலும் இந்த நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு லோகோவையும் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jyothy Lab announces succession plan to appoint Jyothy as MD

Jyothy Laboratories ltd Friday announced its succession plan with M R Jyothy, daughter of company's chairman and managing director M P Ramachandran. slated to take over as its managing director from April 1 next year.
Story first published: Saturday, May 11, 2019, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X