மும்பை : இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு 393 கோடி ரூபாய்க்கு செலவழித்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தி கீழ் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் அறியும் சட்டத்தின் படி கிடைத்த தகவலின் படி, கடந்த 2014 மே மாதத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.

மேலும் இது குறித்து கடந்த டிசம்பர் 2018 ல், ராஜ்ய சபாவில் வெளிநாட்டு பயண செலவுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த மோடி அரசாங்கம், 2,021 கோடி ரூபாய் செலவில் மோடி செல்லும் விமானங்களுக்கு பாதுக்காப்பு பணிக்காகவும் மற்றும் பல வசதிகளை செய்து கொடுக்கவும் செலவானதாக அந்த அரசு பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிக்கையில் மோடியும் அவரது அமைச்சர்களும் வெளி நாடு சென்று வருவதற்காக 263 கோடி ரூபாயை செலவும் செய்துள்ளனர். அதே சமயம் 48 கோடி ரூபாயை உள் நாட்டு விமானங்களுக்காக செலவு செய்துள்ளனர்.
இதுவே மாநில அமைச்சரவையைப் பொறுத்த வரை 29 கோடி ரூபாயை வெளிநாட்டு விமானங்களுக்கும், 53 கோடி ரூபாயை உள்நாட்டு விமானங்களுக்கும் செலவு செய்துள்ளனராம்.
கேபினட் விவகாரத்தின் சம்பள மற்றும் கணக்கு அலுவலகத்தின் மூத்த கணக்கு அலுவலர் சதீஷ் கோயலிடம் இது குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் வெளி நாட்டு பயணம் மற்றும் உள் நாட்டு பயணம் செய்ததில் மொத்தம் 393.58 கோடி ரூபாயாகும். இது கடந்த 2014-15 நிதியாண்டு முதல் 2018 - 2019 ஆம் ஆண்டு வரையிலான அமைச்சகத்தின் மொத்த செலவு 393.58 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது என்றும் கூறியுள்ளராம்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் உள்பட 311 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். இதே நேரத்தில் மாநில அமைச்சர்கள் தங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வருகைக்கு 82 கோடி ரூபாயும் செலவிட்டனர்.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவென்றால், 2014-15 நிதியாண்டில் மட்டும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களால் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.88 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications