மும்பை : கடன்களுக்கான குறைந்த பட்ச வட்டி விகிதத்தை தற்போது எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
இந்த நிலையில் கடன்களுக்கான குறைந்த பட்ச வட்டி விகிதத்தை 8.45 சதவிகிதமாக குறைத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இது இதற்கு முன்னதாக 8.50 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்த வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.50 சதவிகிதத்திலிருந்து 8.45 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து வகையான கடன்களுக்கும் இந்த குறைந்தபட்ச வட்டி விகிதம் பொருந்தும். இதோடு இது கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது வட்டி குறைப்பாகும். இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை எம்.சி.எல்.ஆர் முறையில் குறைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதென்ன எம்.சி.எல்.ஆர்ன்னு கேட்கிறீங்களா? இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரெப்போ விகிதம் குறைப்பின் பலனை முழுமையாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என கருதிய ரிசர்வ் வங்கி, மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் எனப்படும் எம்.சி.எல்.ஆர் முறையை கடந்த 2016 ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டு வந்தது.

இந்த எம்.சி.எல்.ஆர் முறை அமல் செய்யப்பட்ட பிறகு பேஸ்ரேட் வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், பேஸ்ரேட் முறையில் இருந்து வாடிக்கையாளர்களை புதிய முறைக்கு மாற்றுவதில் வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த பேஸ்ரேட் முறையில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால், பேஸ்ரேட் முறையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தில் தவணை செலுத்தி வருகின்றனர். இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இரண்டு முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டால் வட்டி விகிதம் குறையும் என்பதால் வங்கிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் இந்த வட்டி விகிதத்திற்கான நடைமுறை மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வட்டி விகித முறையால் ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தின் பலனை மக்கள் உடனே பெற முடியும். மேலும் சில வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்தாலும் அதனை வாராக்கடன் காரணமாக வட்டி விகித குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுப்பதே இல்லை.
ஆனால் எஸ்.பி.ஐ கொண்டு வந்துள்ள இந்த வட்டி விகித முறை மக்களுக்கு மிக உதவியாக இருக்கும். மேலும் வட்டி விகிதத்தின் மாற்றம் அப்படியே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வட்டி விகித மாற்றத்தால் வங்கியில் செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகரிக்கும். மேலும் வங்கிகள் அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதமும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications