ஸ்விக்கிக்கு ஆர்டரா குவியுதாம்.. ஐ.பி.எல் கிரிகெட் தான் காரணமாம்.. மற்ற நாட்களை விட 30% அதிகரிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு காலத்தில் நாம் சாப்பிட வேண்டுமென்றால் கடையை தேடி செல்வோம், ஆனால் தற்போது உணவை நாம் தேடி சென்ற காலம் போய் தற்போது அது நம்மை தேடி வீடு வரைக்கும் வருகிறது எனில் அது ஸ்விக்கி, உபர் மற்றும் சோமேட்டோ போன்ற நிறுவனங்களால் தான்.

இவ்வாறு உணவு டெலிவரி செய்து வருவதில் முன்னனி நிறுவனமான ஸ்விக்கி தற்போது ஐ.பி.எல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ள இந்த சமயத்தில், கிரிகெட் இருக்கும் தினங்களில் செய்யும் உணவு ஆர்டர், கிரிக்கெட் போட்டி இல்லாத நேரத்தில் ஆர்டர் செய்வதைவிட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வாபி, பிலானி, கன்னியாகுமரி, ரேவா, நிஜாமாபாத் மற்றும் கடப்பா உள்ளிட்ட சிறிய நகரங்களில் மிக அதிகமாக டெலிவரி செய்யப்படுகிறதாம். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ஐபிஎல் தொடக்கம் முதற்கொண்டு இதுவரை 117-மடங்கு ஆர்டர் அதிகரித்துள்ளதாம்.

நாம் ஏன் Business செய்ய வேண்டும்..? நம்மை அதிரடிக்கும் அந்த 10 கேள்விகள்..!நாம் ஏன் Business செய்ய வேண்டும்..? நம்மை அதிரடிக்கும் அந்த 10 கேள்விகள்..!

சிறிய நகரங்களில் அதிகளவில் ஆர்டர்

சிறிய நகரங்களில் அதிகளவில் ஆர்டர்

இந்த சிறிய நகரங்களில் அடிக்கடி உணவுகள் ஆர்டர் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதிகளவிலும் ஆர்டர் செய்யப்படுகிறதாம். குறிப்பாக ஷில்லாங், வட கோவா, சிம்லா மற்றும் ஊட்டி போன்ற பல இடங்களில், அதிகமான மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.

மெட்ரோ நகரங்கள் சிக்ஸர் தான்

மெட்ரோ நகரங்கள் சிக்ஸர் தான்

இதில் ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்கள் எப்போதும் சிக்ஸர் தானாம். அட ஆமாங்க உணவு ஆர்டர் செயவதில் மட்டும் அல்ல அதிகளவு உணவு ஆர்டர் செவதிலும் இதுபோன்ற நகரங்கள் தான் டாப் லெவலாம்.

சிக்கன் பிரியாணி தான் டாப்

சிக்கன் பிரியாணி தான் டாப்

இதுவே டாப் சிட்டிகளான கோட்டா, புவனேஷ்வர் மற்றும் ஜெய்ப்பூரில் உணவு ஆர்டர்கள் குறைவுதானாம். இவ்வாறு ஆர்டர் செய்யப்படுவதில் எந்த உணவு அதிகளவு ஆர்டர் செய்யப்படுகிறது தெரியுமா? சிக்கன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் பிரைடு ரைஸ், கடாய் பன்னீர், மசாலா தோசை, வெஜிடபிள் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களே முன்னனியாம்.

ஐ.பி.எல் சீசனில் சைனீஸ் உணவுகள் அதிக ஆர்டர்

ஐ.பி.எல் சீசனில் சைனீஸ் உணவுகள் அதிக ஆர்டர்

தற்போது இந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் வடஇந்தியா மற்றும் சீனர்கள் உணவு தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டதாம்.

சிக்கன் பிரியாணிக்குள் சிக்கிய சென்னை கொல்கத்தா

சிக்கன் பிரியாணிக்குள் சிக்கிய சென்னை கொல்கத்தா

இதில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு வகை அதிகளவு ஆர்டர் செய்யப்படுகிறதாம். இந்த லிஸ்டில் சென்னை மற்றும் கொல்கத்தா சிக்கன் பிரியாணிக்குள் சிக்கி விட்டதாம். இதே டெல்லி தால் மக்னிக்கும், பெங்களூரு மக்கள் மசாலா தோசைக்கும் அடிமையாகி இருக்கிறதாம்.

எங்களுக்கு பீட்சாவும் சமோசாவும் போதும்

எங்களுக்கு பீட்சாவும் சமோசாவும் போதும்

இன்னும் லிஸ்ட் முடியலயாம் வெயிட் பண்ணுங்க, பெங்களூரு சிக்கன் விங்க்ஸ், டெல்லி மக்கள் அதிகளவு பீட்சா சமோசாகளையும் தான் ஆர்டர் செய்கிறார்களாம். இதே மும்பை நச்சோஸ் (Nachos)யும், சென்னை அதிக அளவில் பிரஞ்ச் ஃபிரைஷ்யும் ஆர்டர் செய்கின்றனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: swiggy ஸ்விக்கி
English summary

Food orders increased on Swiggy this IPL season

As IPL fever enters its last leg, online food delivery platform Swiggy on Friday said food orders shot up 30% during match timings compared to non-cricket days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X