டெல்லி : இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள், கடந்த வாரம் தனது சந்தை மதிப்பை இழந்துள்ளனவாம். அவ்வாறு இழக்கப்பட்ட சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.1.60 டிரில்லியன் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு மதிப்பு குறைந்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு தான் முதலிடமாம்.
இதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளதாம். அதிலும் இந்த டாப் 10 நிறுவனங்களில் டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரத்தில் ரூ. 99,212.9 கோடி சரிந்து ரூ. 7,92,680.96 கோடியாக சரிந்ததுள்ளதாம். ரிலையன்ஸ் நிறுவனமும், டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையான ஒரு நிறுவனம் தான். ஆனால் ரிலையன்ஸ் தனது சந்தை மதிப்பை மிகவும் இழந்துள்ளது. இதே டி.சி.எஸ் நிறுவனம் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.
ஹெச்.டி.எஃப்.சி சந்தை மதிப்பு
மேலும் இதற்கு அடுத்த இடத்தை ஹெச்.டி.எஃப்.சி பெற்றுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தைச் சந்தை 19,634 கோடி சரிந்து 6,25,874.51 கோடி ரூபாயாக சரிந்தது. இதுவே எச்.டி.எஃப்.சி மதிப்பு 13,573.5 கோடி ரூபாயை இழந்து 3,32,435.38 கோடி ரூபாயாக குறைத்தது.
ஐ.டி.சியும் அடங்கும்
இதே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 10,974.8 கோடி குறைந்து 2,48,112.25 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஐடிசியின் சந்தை மதிப்பு 7,232.6 கோடி ரூபாய் குறைந்து 3,64,939.46 கோடியாக குறைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு குறைந்துள்ளது
அதோடு கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 4,409.41 கோடி ரூபாய் குறைந்து 2,66,292.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,364.07 கோடி ரூபாய் குறைந்து 3,12,837.34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
லிஸ்டில் எஸ்.பி.ஐயும் உண்டு
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,233.88 கோடி ரூபாயிலிருந்து 3,65,207.28 கோடி ரூபாயாக குறைத்துள்ளதாம். இதே எஸ்.பி.ஐ சந்தை மதிப்பு 981.71 கோடி ரூபாயிலிருந்து 2,74,922.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
டி.சி.எஸ் சந்தை மதிப்பு அதிகரிப்பு
இதற்கு மாறாக, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,144.48 கோடி ரூபாயிலிருந்து 8,01,340.52 கோடி ரூபாயாகவும் உயர்த்துள்ளது. இந்த முன்னனி நிறுவனங்களில் டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது.
சந்தையில் டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் முதல் இடத்தை டி.சி.எஸ் பிடித்துள்ளது. இதே அடுத்தடுத்த நிறுவனங்களாக முறையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐ.டி.சி, எச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
செக்செக்ஸ் 1500 புள்ளிகள் வீழ்ச்சி
இதே கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 3.85% வீழ்ச்சியடைந்து சரிந்து 37,462.99 புள்ளிகளில் முடிவடைந்திருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications