மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கான ஏலத் தேதி கடந்த வெள்ளிக்கிழமையன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க இரு நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் தெரிவித்துள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தலைவர் ரஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கடும் நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடக்கப்பட்ட நிலையில், ஜெட் ஏர்வேஸ்சை மீட்கும் வகையில் எஸ்.பி.ஐ தலைமையிலான குழு இதற்குண்டான பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க இருவர் மட்டுமே ஆர்வம் தெரிவித்திருப்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

இதோடு இந்த ஏலத்தில் கலந்துக் கொள்ள விரும்பும் பங்குதாரரின் குறைந்தபட்ச மூலதனம் ரூ.1000 கோடியாவது இருக்க வேண்டும், அதோடு குறைந்தபட்சம் 3 வருட அனுபவமாவது இந்த விமான துறையில் இருக்க வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது.
இதே நிதி முதலீடு செய்யும் முதலீட்டாளராக இருப்பின் ரூ.2000 கோடி சொத்து இருக்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் ரூ.1000 கோடியாவது இருக்க வேண்டும் என்றும் விதி முறைகள் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னதாக இந்த பங்கு விற்பனைக்கு நடவடிக்கை எடுத்தபட்சத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்கள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி வந்தன. இந்த நிலையில் இதிஹாட் (Ethihad) மற்றும் டிபிஜி கேப்பிட்டல் (TPG Capital), இண்டிகோ பார்ட்னர்ஸ் ( Indigo Partners), India's National Investment and Infrastructure Fund உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்திற்கு கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ அறிவித்துள்ள அறிக்கையில் இதுவரை 2 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இன்னும் ஒரு விண்ணப்பம் வரலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ்சை நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என எஸ்.பி.ஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சம்பள பாக்கி, குத்தகை பாக்கி, எரிபொருள் பாக்கி, லீஸ் பாக்கி என பல வகையிலும் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையும் கட்ட முடியாமல் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முற்றிலும் முடங்கியது. ஆக மொத்த பெரிய பூட்டாக போட்டு தொங்கவிட்டாச்சு, எனினும் ஜெட் ஏர்வேஸை வாங்க கூட யாரும் முன் வரவில்லை என்பது தான் அந்தோ பரிதாபம்.


Click it and Unblock the Notifications