இந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..! அப்ப தமிழகம்..?

டெல்லி: 2019 ஏப்ரல் மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று மே 12, 2019 மாலை வெளியானது. இனி வருவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான். கடைசியில் தமிழகத்தின் விவரங்கள் தனியாக சொல்லி இருக்கிறோம்.

ஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் பணவீக்கம் 2.92 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் 2.86 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 4.58 சதவிகிதமாக இருந்திருக்கிறது.

இந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..! அப்ப தமிழகம்..?

ஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 1.10 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 0.30 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 2.80 சதவிகிதமாக இருந்திருக்கிறது.

அனைத்து இந்திய மாநிலங்களிலும் சராசரியாக அடிப்படை பொருட்களின் விலைவாசி மாற்றம் ஏப்ரல் 2018 விலைக்கு ஒப்பிட்டு ஏப்ரல் 2019-க்கு மத்திய அரசு கணித்துக் கொடுத்திருக்கிறது

தானியங்கள் 1.17%
மீன் இறைச்சி 7.55%
முட்டை 1.94%
பால் 0.42%
எண்ணெய் & கொழுப்புகள் 0.74%
பழங்கள் -4.89%
காய்கறிகள் 2.87%
பருப்பு வகைகள் -0.89%
சர்க்கரை -4.05%
மசாலா பொருட்கள் 0.80%
எரிபொருள் 2.56%

மேலே சொன்னது அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலைவாசி.

தமிழகத்தின் ஏப்ரல் 2019 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கமும் (CPI Inflation) இந்த அறிக்கையிலேயே வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் ஏப்ரல் 2019-க்கான நுகர்வோர் பணவீக்கம் 3.57 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 2.92 சதவிகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான். தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.96 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 2.90 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியாவிலேயே விலை வாசி அதிகமாக உயர்ந்திருக்கும் இந்திய மாநிலங்கள் படியலில் தமிழகத்துக்கு எட்டாவது இடமாம்.

இந்தியாவிலேயே மிகக் குறைவான நுகர்வோர் பணவீக்கம் கொண்ட மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம். அங்கு ஏப்ரல் 2018-ல் இருந்ததை விட ஏப்ரல் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் -0.72 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம்.

அதற்கு நேர்மாறாக இந்தியாவிலேயே மிக அதிகமான நுகர்வோர் பணவீக்கம் கொண்ட மாநிலமாக கர்நாடகம் இடம் பிடித்திருக்கிறது. அங்கு ஏப்ரல் 2018-ல் இருந்ததை விட ஏப்ரல் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் -0.72 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் 2019-ல் 5.21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் எவ்வளவு பணவீக்கம் இருக்கிறது என கீழே அட்டவணையில் பாருங்கள்.

மாநில வாரியாக நுகர்வோர் பணவீக்கக் குறியீடு - ஏப்ரல் 2019
மாநிலங்கள்கிராமம்நகரம்மொத்தம்
Himachal Pradesh-1.724.04-0.72
Bihar0.073.830.58
Andhra Pradesh-1.124.430.86
Telangana-3.004.511.01
Chhattisgarh-0.574.231.31
Haryana0.302.781.41
Odisha0.145.181.44
Gujarat-0.644.982.47
West Bengal1.563.812.66
Jharkhand0.217.112.66
Maharashtra0.353.962.67
All India1.874.232.92
Rajasthan3.123.593.28
Punjab3.753.073.45
Uttar Pradesh3.433.603.49
Tamil Nadu2.903.963.57
Jammu & Kashmir1.837.683.77
Madhya Pradesh2.715.593.90
Uttarakhand3.884.564.13
Delhi11.193.874.24
Assam4.425.824.75
Kerala5.314.755.13
Karnataka4.295.995.21

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+