திருப்பி அடிச்சா தாங்கமாட்டா.. அமெரிக்கா செல்லும் எண்ணெய் டேங்குகள் தாக்குதல்.. ஈரானுக்கு எச்சரிக்கை

அபுதாபி : ஈரானுக்கும் அமெரிக்காவும் ஏற்கனவே முட்டிக்கோ மோதிக்கோ என்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் சவுதியின் இரு எண்ணெய் டேங்குகள் தாக்கப்பட்டுள்ளனவாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா கடற்படைகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்ததாம். இது குறித்து சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹியும் கண்டனம் தெரிவித்தாராம்.

அதோடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் பிராந்திய கூட்டாளிகளும் இந்த அறிக்கைக்கு எதிராக கண்டனம் செய்தனராம். இதையடுத்து ஈரான் மற்றும் லெபனான் ஊடங்களில் வெடிகுண்டு பற்றிய ஒளிப்பரப்பு வந்ததாகவும், இந்த அறிக்கை வந்த ஒரு மணி நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் இது ஒரு நாச வேலையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறதாம்.

திருப்பி அடிச்சா தாங்கமாட்டா.. அமெரிக்கா செல்லும் எண்ணெய் டேங்குகள் தாக்குதல்.. ஈரானுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் ஏற்கனவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனையால், இது தற்போது ஊதி விட்டது போல அமெரிக்காவின் கவனம் தற்போது ஈரான் மீது திரும்பியுள்ளதாம்.

இந்த நிலையில் எமிராட்டின் அதிகாரிகள் இந்த நாச வேலை குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனராம். அதோடு யார் பொறுப்பு என்று கூறியுள்ளனராம். எனினும் ஈரான் இதற்கு காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளதாம்.

சரி அப்படி என்னதான் பிரச்சனை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும்? அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவியேற்றதும் முதலில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன். இது மிக மோசமான ஒன்று என பல முறை சொல்லியிருந்தார். பின்னர் அதேபோலவே அணுசக்தி ஒப்பந்தத்தையும் ஈரானுடன் முறித்துக் கொண்டார்.

திருப்பி அடிச்சா தாங்கமாட்டா.. அமெரிக்கா செல்லும் எண்ணெய் டேங்குகள் தாக்குதல்.. ஈரானுக்கு எச்சரிக்கை

ஆனால் இந்த நிலையில் மற்ற நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடவில்லை. எனினும் அமெரிக்கா இதோடு விடுவதாக தெரியவில்லை. ஈரான் மீது பொருளாதார தடையையும் விதித்தது. அதோடு ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் எண்னெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் மற்ற நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் இது இன்றும் தொடர்கதையாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+