முதலீட்டாளராக தீபிகா படுகோன்.. கைகொடுக்கும் முதலீடு என்று பெருமையாம்.. Drums Food

டெல்லி : தீபிகா படுகோணை அனைவருக்கும் ஒரு பாலிவுட் நடிகையாகவும், விளம்பர நடிகையாகவும் தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரை ஒரு நல்ல முதலீட்டாளராக யாரும் கேள்விபட்டிருக்க முடியாது. ஆம் தீபிகா சத்தமேயில்லாமல் தற்போது எஃப்.எம்.சி.ஜி துறையிலும் தனது முதலீட்டின் மூலம் கால் பதிக்க தொடங்கியுள்ளாராம்.

பிரபல எஃப்.எம்.சி.சி மற்றும் புட்அண்ட் பேவரேஜ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான டிரம்ஸ் ஃபுட் இன்டர்நேஷனல் (Drums Food international) நிறுவனத்தில் சத்தமேயில்லாமல் முதலீடு செய்திருக்கிறராம் தீபிகா.

இது குறித்து இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோகன் கூறுகையில், தீபிகாவின் வருகை எங்களது பொருட்களின் வளர்ச்சிக்கு இன்னும் கைகொடுக்கும். தீபிகாவின் இந்த முதலீட்டின் மூலம் யோகர்ட் பொருட்களின் மீது முதலீடும் அதிகரித்துள்ளது. மேலும் புதிய பொருட்களின் மீது முதலீடும் அதிகரிக்கும், அதோடு இன்னும் பல நகரங்களுக்கு இந்த பொருட்களை கொண்டு செல்லவும் இந்த முதலீடு உதவும் என்றும் கூறுகின்றனர்.

மக்களுக்கு பிடித்தமான உணவு பொருட்கள்

மக்களுக்கு பிடித்தமான உணவு பொருட்கள்

கடந்த 2015ல் தொடங்கப்பட்ட இந்த யோகர்ட் பொருட்களுக்கான (Epigamia)உற்பத்தி மையங்கள். தற்போது 20 இருப்பு மையங்களை கொ ண்டுள்ளது. இந்த இருப்பு மையங்களின் மூலம் ருசியான தயிர் பிராண்டான Epigamia, மற்றும் சிற்றுண்டி பேக் வகைகள் என பல வகையிலும் மக்களுக்கு பிடித்தமான இந்த பொருட்கள் சப்ளை செய்படுகின்றவாம்.

சில்லறை விற்பனை நிலையங்கள்

சில்லறை விற்பனை நிலையங்கள்

இந்த டிரம்ஸ் ஃபுட் இண்டர்நேஷனல் நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரோஹன் மிர்ச்சந்தானி, கணேஷ் கிருஷ்ணமூர்த்தி, ராகுல் ஜெயின், மற்றும் உதய் தக்கர் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் பிக் பேஸ்கட் மற்றும் அமேசான் உள்ளிட்ட 10,000 சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இதன் தயாரிப்புகள் விற்கப்படுகின்றனவாம்.

விரிவாக்கம் செய்யப்படும்

விரிவாக்கம் செய்யப்படும்

தற்போது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே டெலிவரி செய்து வரும் இந்த நிறுவனம் இனி டெல்லி -NCR, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை முழுவதும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பரவலாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறுகிறார்களாம்.

விவாக்க திட்டம்

விவாக்க திட்டம்

இதோடு அடுத்த இரண்டு ஆண்டுகளில், 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் 50,000 க்கும் அதிகமான விநியோகங்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளதாம்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா

கடந்த 2018-ம் ஆண்டில் டாப் 5 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா படுகோனும் ஒருவராம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தீபிகா தான் முதலிடமும் கூட. இவ்வாறு பணக்காரர் பட்டியியலில் இடம்பெற்ற பெண்களிலும் இவர்தான் முதலிடமாம்.

20 பொருட்களுக்கு செலிப்பிரிட்டி

20 பொருட்களுக்கு செலிப்பிரிட்டி

தீபிகா தற்போது 20க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு செலிபிரிட்டியாக இருப்பது கவனிக்கதக்கது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 102 மில்லியன் டாலர்களாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+