இப்படியொரு மோசமான வாகன விற்பனையை பார்த்ததில்லை.. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.. சியாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கார் விற்பனை 15.9 சதவிகித சரிவைக் கண்டுள்ளதாம். இது எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான விற்பனை வீழ்ச்சியாம். அதோடு இது கார் உற்பத்தியாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் உருவாக்கியும் உள்ளது.

 

இது குறித்து தொழில்துறையின் நிர்வாகிகளிடத்தில், இனி வரும் மாதங்களில் இந்த மாதத்திற்குப் பிறகு நல்ல மழைக்காலமும், புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளும் உள்ளிட்ட பல காரணிகளையே சார்ந்து உள்ளது எனவும் கூறியுள்ளனராம்.

இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) கொடுத்த தகவல்களின்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே கார் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது.

"மோடியால் ரூ.6.30 லட்சம் கோடி நஷ்டம்" கட்டாயம் தேர்தலில் ஜெயிக்கமாட்டார்! சொல்வது வெளிநாட்டவர்கள்.!

சரிந்தது வாகன விற்பனை

சரிந்தது வாகன விற்பனை

மேலும் இதோடு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2,001,096 ஆக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 2,380,294 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது கவனிக்கதக்கது.

இப்படியொரு மோசமான விற்பனையை பார்த்ததில்லை

இப்படியொரு மோசமான விற்பனையை பார்த்ததில்லை

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இப்படியொரு மோசமான விற்பனையை பார்த்ததில்லை. எனினும் இந்த புதிய நிதி ஆண்டின் தொடக்கமானது மிகச் சிறந்ததாக மாறிவிடவும் இல்லை என்று என சியாம் நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் சுகாடோ சென் தெரிவித்துள்ளார்.

பயணிகள் வாகன விற்பனை 17% வீழ்ச்சி
 

பயணிகள் வாகன விற்பனை 17% வீழ்ச்சி

மொத்தத்தில் அனைத்து வாகன விற்பனையும் மிக குறைந்துள்ளன. அதிலும் பயணிகள் வாகன விற்பனை 17 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த பயணிகள் வாகன விற்பனை 2,47,541 ஆகும். இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 2,98,504 பயணிகள் வாகன விற்பனை செய்திருந்தது கவனிக்கதக்கது.

மோட்டார் சைக்கிள் விற்பனையும் குறைந்தது.

மோட்டார் சைக்கிள் விற்பனையும் குறைந்தது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நகர்ப்புறங்களில் மிக விரும்பப்படும் ஸ்கூட்டர் விற்பனை 26 சதவிகிதம் விற்பனையில் தீவிரமாக குறைந்தும் காணப்பட்டது. அதேபோல் கிராமப்புறங்களில் அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள்களில் விற்பனையும் 16 சதவிகிதம் குறைந்து மந்தமாகவே காணப்படுகிறது.

உடனடியாக எந்த மாற்றமும் கிடைக்காது.

உடனடியாக எந்த மாற்றமும் கிடைக்காது.

இந்த நிலையில் சியாம் நிறுவனத்தின் ஜெனரல் இயக்குனர் விஷ்ணு மாதுர் கூறுகையில், பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு விற்பனை சில வகையான மீட்புக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது கிராமப்புற பொருளாதாரத்தில் எதிர்பார்க்க முடியாது. அது எப்போதும் 11.8 சதவிகிதம் குறைவாகவே இருக்கும். எனினும் எந்த விற்பனையாக இருந்தாலும் உடனடியாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது எனவும் மாதுர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's car sales decline 16% in April, the worst in eight years: Siam

India’s car sales saw a down of 15.9% in April, its very worst in eight years.
Story first published: Tuesday, May 14, 2019, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X