எண்ணெய் இறக்குமதி பற்றி பேசுவாங்களோ.. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இந்தியா வருகை

டெல்லி : ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வர உள்ளராம். அதோடு இவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்தி பேச உள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக, அமெரிக்கா ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யக் கூடாது என்று மிரட்டியும் வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் ஈரானிடம் எண்ணெய் வாங்ககூடாது, அவ்வாறு வாங்கினால் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுமென்றும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எண்ணெய் இறக்குமதி பற்றி பேசுவாங்களோ.. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இந்தியா வருகை

இந்த நிலையில் மீண்டும் ஜீன் மாதம் வரையில் அமெரிக்கா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என கூறியிருந்தாலும், இது ஒரு நிரந்தரமான தீர்வே அல்ல என்றே பொருளாதார நிபுனர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் ஈரான் இந்திய உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று தனக்கான ஆதரவை தேடி வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேச உள்ள ஈரானிய அமைச்சர் ஜவாத் ஷரீப்பும், சுஸ்மா ஸ்வராஜ் பேச உள்ளனர்.

முக்கியமாக இந்த எண்ணெய் இறக்குமதி குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சபாஹார் துறைமுக திட்டம் (Chabahar port project) பற்றியும் பேசப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா தான் அதிகளவு இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் அதிகளவு இறக்குமதி செய்யும் நாடான சீனாவில் ஏற்கனவே வர்த்தக போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் அடுத்த டார்கெட் இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

எண்ணெய் இறக்குமதி பற்றி பேசுவாங்களோ.. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இந்தியா வருகை

குறிப்பாக இந்தியா எண்ணெய் இறக்குமதியில் மாதம் 1.25 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே ஆண்டுக்கு 15 மில்லியன் டன்னாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது 3,00,000 பேரல்கள் ஒரு நாளைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறதாம். ஆனால் இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது குறைவுதானம்.

இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 22.6 மில்லியன் டன்களாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது கவனிக்கதக்கது. இதுவே ஒரு நாளைக்கு 4,52,000 பேரல்களாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே எண்ணெய் அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, அட ஆமாங்க 3 வது இடத்துல இருக்காம். இந்திய மொத்தம் எண்ணெய் நுகர்வில் 80% இறக்குமதி தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+