“மோடியால் ரூ.6.30 லட்சம் கோடி நஷ்டம்” கட்டாயம் தேர்தலில் ஜெயிக்கமாட்டார்! சொல்வது வெளிநாட்டவர்கள்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

58.42 ரூபாய். 19 மே 2014 அன்று ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.42 ரூபாய். இதற்குக் காரணம் நரேந்திர மோடி.

இந்தியாவில் மீண்டும் ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது என சர்வதேச அளவில் கூவப்பட்டதால் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19 மே 2014-ல் 58.42 ரூபாய்க்கு குறைந்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்த காலத்தில், 28 ஆகஸ்ட் 2013-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 68.36 ரூபாய் என மிகக் கடுமையான நிலையில் இருந்தது.

 

சொத்தை விற்கும் ஓபராய்.. புதிய முதலீட்டிற்காக 50% பங்கினை விற்க விகாஸ் ஓபராய் திட்டம்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

ஏற்கனவே மோடி, ஒரு கேப்பிட்டலிஸ்ட் என்பதை தன் குஜராத் மாநில வளர்ச்சியில் அழுத்தமாக உலகுக்கு காட்டியவர். அதோடு மேற்கு வங்காளத்தில் விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலையை அலாக்காக தன் குஜராத் மாநிலத்தில் அமைத்துக் கொடுத்து, அத்தனை தொழில் சார்ந்த உதவிகளும் செய்து கொடுத்தவர் நம் மோடி. இதைப் பார்த்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் "மோடி பிரதமர் பதவிக்கு வந்தால் இந்தியா முழுக்க பல வியாபார வாய்ப்புகள் திறக்கப்படும். நாம் போடும் முதலீட்டுப் பணத்துக்கும் நல்ல லாபம் கிடைக்கும், பிசினஸும் பாதுகாப்பாக நடத்தலாம்" என பல கனவு கண்டார்கள்.

கொஞ்ச நாள்

கொஞ்ச நாள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த படி மோடி ஆட்சி செய்கிறார் என நம்பி, 2014-ம் ஆண்டில் 2.56 லட்சம் கோடி ரூபாயும், 2017-ம் ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடியின் மோசமான பொருளாதார நடவடிக்கைகளால் வேகமாக தங்கள் முதலீடுகளைப் வெளியே எடுத்தார்கள். 2016-ம் ஆண்டில் 23,709 கோடி ரூபாயை விற்று வெளியேறினார்கள். 2018-ம் ஆண்டில் 80,919 கோடி ரூபாயை விற்று வெளியேறினார்கள்.

சென்செக்ஸ்
 

சென்செக்ஸ்

2014 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 07, 2014 தொடங்கி மே 12, 2014 வரை நடந்தது. தேர்தல் முடிவுகள் மே 16, 2014 அன்று அறிவிக்கப்பட்டது. மே 26, 2014-ம் ஆண்டு கண்ணீர் மல்க மோடி பிரதமராக பதவி ஏற்றார். இந்த ஏப்ரல் 07 முதல் மே 26 வரை சென்செக்ஸ் சுமார் 11 சதவிகிதம் உயர்ந்தது. அதுவும் சுமார் இந்த 50 நாட்களில் நடந்த சந்தை மாற்றங்கள். ஏப்ரல் 07, 2014 அன்று 22,343 புள்ளிகளில் வர்த்தகமான சந்தை மோடி அலையால் மே 26, 2014-ல் 24,913 புள்ளிகள் வரை தொட்டு வர்த்தகமானது. நம்மைக் காக்க மோடி எனும் ரட்சகன் வந்துவிட்டார் என்கிற நம்பிக்கையில் தான் சந்தை இந்த அளவுக்கு ஏற்றம் கண்டது.

சரிவு

சரிவு

இந்த 2019 மக்களவைத் தேர்தல் கடந்த 11 ஏப்ரல் 2019 முதல் வரும் 23 மே 2019 வரை நடக்க பல கட்டங்களாக நடந்து வருகிறது. ஆக இந்த 42 இந்திய பங்குச் சந்தைகள் இன்னும் எத்தகைய கோரமான மாற்றங்களைக் காணப் போகிறது எனத் தெரியவில்லை. இப்போதே 11 ஏப்ரல் 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் சந்தை தன் உச்சப் புள்ளியான 39,420-ல் இருந்து சரிந்து தற்போது சுமார் 37,050 புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் 6.30 லட்சம் கோடி ரூபாய்க்கு சந்தை மதிப்பு குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்ககிறது. அதாவது 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி இந்திய சந்தை சுமார் 6 சதவிகித இறக்கத்தைக் கண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஐந்து சதவிகித இறக்கத்தைக் காணலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள். கடந்த 3 வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் நாள் ஒன்றுக்கு ஒரு சதவிகிதம் இறங்கிக் கொண்டே வருகிறது.

கொதரிவிட்டார் மோடி

கொதரிவிட்டார் மோடி

இதற்கு என்ன பொருள்..? இந்தியாவைக் காக்க வந்த ரட்சகன் மோடி, இந்தியாவைக் காக்கவில்லை. மொத்தமாக காலி செய்து விட்டார். பொருளாதாரத்தையே கொதரி எடுத்து விட்டார் என்று தான் பொருள். அதையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அனலிஸ்டுகள். முதல் அடி பணமதிப்பிழப்பு (Demonetisation).

புதிய இந்தியா

புதிய இந்தியா

பணமதிப்பிழப்பு. நவம்பர் 08, 2016 அன்று ஏதோ புதிய இந்தியாவைப் பிறக்க வைக்கப் போகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வந்தார். புதிய இந்தியா வந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் ஏற்கனவே unorganised sector என்று சொல்லப்படும் அமைப்புசாராத, அதிகம் நெறிமுறைப்படுத்தப்படாத துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் ஆப்படித்தார் மோடி.

வேலை காலி

வேலை காலி

ரூபாய் நோட்டுத் தடையால், பெரும்பாலும் ரொக்கத்தை மட்டுமே நம்பித் தொழில் செய்த பலர் கடைக்கு நல்ல அலிகார் பூட்டை வாங்கித் தொங்கவிட வேண்டி இருந்தது.

இதனால் சாதாரண தொழில் செய்து கொண்டிருந்தவர்களும், அவர்களைச் சார்ந்திருக்கும் நபர்களின் வேலையும் பறி போனது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் அதிகரித்தது. சுமார் 4 கோடி பேர் வேலை இழந்ததாக அரசு ஆவணங்களே சொல்கின்றன. ஆனால் இதுவரை வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்து அரசு அறிக்கை வெளியிடவில்லை.

வருமானம் இல்லை

வருமானம் இல்லை

அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் வேலை பறி போனதால், வேலையில்லாதவர்களின் குடும்பத்துக்கு பணம் கிடைக்கவில்லை. கையில் பணம் இல்லாததால் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட, அந்தப் பாவப்பட்ட, மோடியின் பணமதிப்பிழப்பால் வேலை இழந்த ஏழைகள் ஒழுங்காக வாங்கவில்லை, வாங்க முடியவில்லை. கிடைக்கும் வேலைக்கு போய் தங்கள் வயிற்றைக் கழுவிக் கொண்டார்கள்.

தேவை சரிவு

தேவை சரிவு

எனவே ஒட்டு மொத்தமாக பொருளாதாரத்தில் ஒரு வலுவான தேவை (Demand) சரிவு அடைதிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதை இந்தியாவின் FMCG நிறுவனங்களே சொல்லி இருக்கின்றன. 2008-ம் ஆண்டுக்குக்குப் பிறகு இப்போது தான் தங்கள் நிறுவன வியாபாரம் பெரிய அளவில் சரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவின் மிகப் பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் யுனிலிவரின் காலாண்டு முடிவுகளின் வருவாய் வளர்ச்சி, கடந்த ஐந்து காலாண்டுகளாக 4%-க்கு கீழேயே இருக்கின்றன. இதே கதி தான் இந்தியாவின் அனைத்து FMCG நிறுவனங்களுக்கும். சரக்குக்கான தேவை இல்லாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே வியாபாரம் அதிகரிக்காமல், தேக்கம் காண்கிறது. தேக்கத்தினால் நிறுவனங்களின் லாபம் குறைகிறது. லாபம் குறைவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் தயக்கத்தோடு தங்கள் முதலீடுகளை விற்ரு விடுகிறார்கள் அல்லது முதலீடு செய்யாமல் ஒதுங்கி விடுகிறார்கள்.

இரண்டாவது அதிர்ச்சி

இரண்டாவது அதிர்ச்சி

2016-ல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பில் இருந்தே இந்தியா முழுமையாக வெளி வரவில்லை. அதற்குள், இந்தியாவின் மறைமுக வரியை முற்றிலும் மாற்ரி அமைக்கும் விதத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைத் திணித்துவிட்டது பிரமாதமான அறிவு கொண்ட மோடி அரசு. இப்போது இந்தியாவில் ornaised sector எனப்படும், அமைப்பு சார்ந்த, நெறிமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களை இந்த ஜிஎஸ்டி பெயரில் தாக்கி அழிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

தெளிவு இல்லை

தெளிவு இல்லை

இன்று வரை ஜிஎஸ்டி-க்கான தெளிவு பிசினஸ் செய்பவர்களிடமோ அல்லது அதிகாரிகளிடமோ முழுமையாக வரவில்லை. அந்த அளவுக்கு ஜிஎஸ்டி சட்டங்களில் இடியாப்பச் சிக்கல்கள் இருக்கின்றன. இப்படித் தான் வாட், சேவை வரி போன்றவைகளைக் கொண்டு வரும் போது இனி இந்தியாவில் வரி வசூலித்தம் குறையும் எனச் சொல்லித் தான் கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால் சொல்லி வைத்தாற் போல் சொதப்பியது. ஜிஎஸ்டி விஷயத்தில் அரசுக்கு தேவையான வருவாய் ஒழுங்காக வருமா என்று கூட கணிக்க முடியாத அளவுக்கு மெகா சொதப்பல், சொதப்பி இருக்கிறார்கள் பாஜக அரசினர்கள், என்றால், ஜிஎஸ்டி என்ன லட்சனத்தில் கணக்கிட்டு இருப்பார்கள் என வியாபாரிகளும், ஜிஎஸ்டி வசூலித்துக் கொடுக்கும் நிறுவனங்களும் புலம்பிக் கொண்டிருக்கிறது. இதில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைவு நடவடிக்கை வேறு செய்திருக்கிறார்கள்.

பெரும்பான்மை கிடையாது

பெரும்பான்மை கிடையாது

இப்படி பாஜக அரசு சொதப்பிய பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இந்தியப் பொருளாதாரத்தை உறைய வைத்து விட்டார்கள். அதோடு டைம் பத்திரிகைச் சொல்லி இருப்பது போல ஆனா உனா என்றால் மதத்தையும், நாட்டுப் பற்றையும் சொல்லி ஆட்சி செய்வதையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறது டைம்ஸ் பத்திரிகை. இப்படி எல்லாமே மோடிக்கு எதிராக இருப்பதால், மோடி நிச்சயம் ஜெயிக்க மாட்டார். அப்படியே ஜெயித்தாலும், முன்பு போல தனிப் பெரும்பாமை பெறவே பெறாது என ஆரூடம் சொல்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.

இந்தியாவின் தங்கள் பணத்தை முதலீடு செய்து லாபம் பார்க்க வந்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சொல்வது சரி தானா..? அவர்கள் சொல்வது நிறைவேறுமா..? இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவின் போது பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

modi would not win 2019 election because investor lost 6.30 lakh crore due to modis wrong economic policy

modi would not win 2019 election because investor lost 6.30 lakh crore due to modis wrong economic policy
Story first published: Tuesday, May 14, 2019, 14:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more