10 ஆண்டுகளுக்கு முன் சிம்பொனி நிறுவன பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு ரூ.2.78 கோடி. லட்சாதிபதியாக இருந்த நீங்கள் இப்போது கோடீஸ்வரராக மாறியிருப்பீர்கள்.
மும்பை: நீங்கள் செய்யும் முதலீடு 1 ரூபாயாக இருந்தாலும் அதனை சரியான திட்டத்தில் சரியான பங்கில் அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் இன்றைக்கு நீங்களும் ஒரு கோடீஸ்வரர்தான். ஒரு வேளை நீங்கள் சிம்பொனி பங்கில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு சுமார 2.78 கோடி ரூபாய் தான்.
எனவேதான் நாம் நம்முடைய பணத்தை முதலீடு செய்வதாக இருந்தாலும் நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் முதலீடு செய்யவேண்டும் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் எதிர்பார்ப்பாகும்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிறுவனம் சிம்பொனி ஏர்கூலர் நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் கடந்த 1994ஆம் ஆண்டில் தான் மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
சிம்பொனி நிறுவனம் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான ஏர்கூலர்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றது. நாட்டின் முன்னனி ஏர்கூலர் நிறுவனமாக விளங்கிவருகிறது. ஏர்கூலர் உற்பத்தியில் கென்ஸ்டார், கிராம்ப்டன், வோல்டாஸ், கோத்ரேஜ் மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் சிம்பொனி நிறுவனமே உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் டார்லிங் பங்காக சிம்பொனி நிறுவனம் தொடர்து இருந்து வருகிறது. கடந்த 1994ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்தே மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் அதிக வருமானத்தை கொடுத்து வருகிறது.
இந்தியாவின் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பொனி நிறுவன பங்கில் சுமார் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். இன்றைக்கு அதன் மதிப்பு சுமார் ரூ.7.5 லட்சமாகும். கடந்த நான்கு வருடத்தில் இந்தப் பங்கின் வருவாய் சுமார் 650 சதவிகிதமாகும்.
சிம்பொனி நிறுவனமே ஏர் கூலர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். சந்தை மதிப்பில் இந்நிறுவனமே 50 சதவிகித மதிப்பைப் பெற்றுள்ளது. இதன் போட்டியாளர்களான வோல்டாஸ், கிராம்ப்டன், கென்ஸ்டார், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியைக் கொடுத்தாலும் இந்நிறுவனமே தொடர்ந்து சந்தை மதிப்பில் முன்னனியில் இருந்து வருகிறது.
சிம்பொனி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்று இதன் சந்தை மதிப்பு ரூ.11 ஆகும். நீங்கள் இந்தப் பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு சுமார் ரூ.2.78 கோடி ஆகும். அதாவது இந்தப்பங்கின் மீது செய்த முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் சுமார் 27751 சதவிகிதமாகும்.
இதே காலகட்டத்தில் மும்பை பங்குச் சந்தை கொடுத்த வருமானம் சுமார் 211 சதவிகிதம் மட்டுமே. கடந்த 2009ஆம் ஆண்டில் சிம்பொனி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4.70 ஆகும். ஆனால் இன்றைக்கு மும்பை பங்குச் சந்தையில் இதன் சந்தை மதிப்பானது சுமார் ரூ.1259 ஆகும்.
கடந்த ஆண்டில் சிம்பொனி பங்கின் விலையில் சுமார் 26.69 சதவிகிதம் இழப்பை சந்தித்தாலும் நடப்பு ஆண்டில் இது வரையிலும் சுமார் 12.48 சதவிகிதம் வருமானத்தை கொடுத்துள்ளது.
எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பணத்தை சிம்பொனி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தால் அந்தப் பணம் பல்கிப் பெருகும். இல்லாவிட்டால் நாம் செய்த முதலீடு ஓட்டை பையில் போட்ட பணத்தைப் போல் காணாமல் போகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications