டாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 22% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளிலும் இன்று காலையிலேயே வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 3% குறைந்து 180.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக அளவில் வாகன விற்பனை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக 79,923 (ஜகுவார் லேண்டு ரோவர் உள்பட) வாகனங்களை மட்டுமே கடந்த ஏப்ரல் 2019ல் விற்பனை செய்துள்ளதாம். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 22 சதவிகிதம் குறைவாம்.

டாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி

இதுவே வர்த்தகம் தொடர்பான வாகனங்கள் 20 சதவிகிதம் குறைந்து 31,726 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதே பயணிகள் வாகனம் 23 சதவிகிதம் குறைந்து 48,197 ஆக குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 35,451 ஜகுவார் லேண்டு ரோவர் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனவாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் சொகுசு காரான ஜகுவார் கார் விற்பனை 13,301 மட்டுமே, இதே லேண்டு ரோவர் கார்களின் விற்பனை 22,150 கார்களாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கவனிக்கதக்கது.

பொதுவாகவே பயணிகள் வாகன விற்பனை, டாடா மோட்டார்ஸ் மட்டும் அல்ல அனைத்து நிறுவனங்களின் வாகன விற்பனை சரிந்துள்ளதாம். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது கவனிக்கதக்கது.

இது குறித்து சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,47,541 பயணிகள் வாகனங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டு 2,98,504 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது கவனிக்கதக்கது. இதில் கார்களின் விற்பனை மட்டும் 20 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது.

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,60,279 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 2,00,183 ஆக இருந்தது கவனிக்கதக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வரும் காலாண்டுகளிலும் டீசல் கார்கள் விற்பனை குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2020 ஆண்டு வரும் மாசு காட்டுப்பாட்டு வாரியத்தால் அமலுக்கு புதிய விதி முறைகளால், டீசல் கார்களுக்கான கெடுபிடிகள் அதிகமாகலாம் என்றும், இதே சில வாகன நிறுவனங்கள் இத்தகைய டீசல் கார்களின் உற்பத்தி விலை அதிகரிக்கலாம் என்றும், இதனால் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors global wholesale down in April month

Tata Motors yesterday reported 22% decline in group global wholesales at 79,923 units in April 2019.
Story first published: Tuesday, May 14, 2019, 10:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X