ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத ஸீ ஜின்பிங் - இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்திய சீனா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, போட்டியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி உத்தரவிட்டது பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பால் 5140 பொருட்களுக்கு 5 முதல் 25 சதவிகிதம் வரையில், சுமார் 4.23 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் கூடுதலாக அமெரிக்கா வரி செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக சீனா நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாங்கள் எந்தவித மிரட்டலுக்கும் பயந்து சரணடையமாட்டோம், எங்களுக்கு சீனாவின் தேசிய நலனையும் கண்ணியத்தையும் கட்டிக் காப்பதே முக்கியம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

 

சிம்பொனியில பத்து வருஷத்துக்கு முன்னாடி பணத்தை போட்டவங்க இப்போ கோடீஸ்வரர்கள்- எப்படி தெரியுமா

நானே வருவேன்

நானே வருவேன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்தாலும் தனி மெஜாரிட்டி இல்லாததால், அமெரிக்க பாராளுமன்றத்தில் தனித்து விடப்பட்ட குழந்தையாகவே இருந்தார். வரும் தேர்தலிலாவது மக்கள் செல்வாக்குடன் முழு பலத்துடன் வந்த அதிபர் பதவியில் உட்கார்ந்தே ஆகவேண்டும் என்று அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

 ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு

ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு

வரும் 2020ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலை உத்தேசித்தே ட்ரம்ப் சீனாவை எச்சரிக்கும் விதத்தில் இறக்குமதி வரி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு எச்சரிக்கும் விதத்தில் கூறினார். ஆனால் சீனாவோ எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் திரும்பவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

சீனா போட்ட பிள்ளையார் சுழி
 

சீனா போட்ட பிள்ளையார் சுழி

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போருக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டதே சீனாதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாகும். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதி விதிக்கப்படுவதில்லை. காரணம் தடையில்லா வர்ததகம் நடைபெறவேண்டும் என்ற காரணத்தினால் தான்.

வரி குறைவுதான்

வரி குறைவுதான்

அமெரிக்காவின் இந்த தாராள மனதை சாதகமாக வைத்து பெரும்பாலான நாடுகள் தங்களின் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றன. ஆனால் அதனாலெல்லாம் அமெரிக்காவுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. ஆனால், சீனா-அமெரிக்கா வர்த்தக உறவு அப்படி இல்லை. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மிகக்குறைவாகவே வரி விதிக்கிறது.

அமெரிக்காவின் கடன் 80 லட்சம் கோடி ரூபாய்

அமெரிக்காவின் கடன் 80 லட்சம் கோடி ரூபாய்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா குறைவான வரி விதிப்பதற்கு முக்கிய காரணம், சீனா ஏகப்பட்ட கடனை அமெரிக்காவுக்கு வழங்கியதே. அதாவது சீனா அமெரிக்காவுக்கு வழங்கிய கடனின் மதிப்பு சுமார் 80 லட்சம் கோடி ரூபாயாகும். இதன் மதிப்பானது தன்னுடைய கையிருப்பிலுள்ள கரன்சி மற்றும் கடன் பத்திரங்களில் மதிப்பில் சுமார் 28 சதவிகிதமாகும். இதன் காரணமாகவே முன்பிருந்த அதிபர்கள் சீனா விசயத்தில் பெரிதாக எந்தவித அழுத்தத்தையும் தந்ததில்லை.

நான் அவனில்லை

நான் அவனில்லை

முன்னர் இருந்த அதிபர்களை விட தான் வித்தியாசமானவன் என்பதை அமெரிக்க மக்களுக்கும், சீனாவுக்கும், ஏன் உலகுக்கும் கூட தெரிவிக்கும் விதமாகவே தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். ஆகவேதான் சீனா விசயத்தில் சற்று அதிகப்படியாக ஆவேசப்படுகிறார். அவர் நினைப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் உள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறைதான் காரணமா

வர்த்தகப் பற்றாக்குறைதான் காரணமா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் குறைவாகவே இறக்குமதி வரி விதிக்கிறோம். ஆனால் நம்முடைய பொருட்களுக்கு மட்டும் சீனா ஏன் அதிக வரி விதிக்கவேண்டும் என்று ஆத்திரப்பட்டார். இவருடைய கோபத்திற்கு இன்னுமொரு காரணம், சீனாவுக்கு அனுப்பும் ஏற்றுமதியைக் காட்டிலும் அங்கிருந்து வரும் இறக்குமதி அதிகமாக உள்ளது. இதனால் வர்த்தகப்பற்றாக்குறை ஏற்பட்டு தன்னுடைய பாக்கெட்டை விட்டு பணம் சீனாவுக்கு போகிறதே என்ற ஆற்றாமை தான்.

இறக்குமதி வரியை குறை

இறக்குமதி வரியை குறை

வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டுமென்றால், அமெரிக்க பொருட்களுக்கு சீனா, தன்னைப் போல் குறைவாக வரி விதிக்க வேண்டும், இல்லாவிட்டால் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்தது. ஆனால் சீனா எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வரியை உயர்த்த வேண்டியதுதான்

வரியை உயர்த்த வேண்டியதுதான்

சீனாவின் உதாசீனத்தை அடுத்து கடுப்பான ட்ரம்ப், அடுத்ததாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் சற்று இறங்கி வந்த சீனா, இறக்குமதி வரி குறைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி, அதன் பின்னர் வரி குறைப்பது பற்றி முடிவெடுக்கலாம் என்று அறிவித்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

பேச்சுவார்த்தை தோல்வி

ட்ரம்ப் இதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு கடந்த 10ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு சீன துணை அதிபர் லியூ ஹீ தலைமையிலான குழு கடந்த 10ஆம் தேதி அமெரிக்கா சென்று, அங்கு அமெரிக்க வர்ததக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் மற்றும் கருவூலக செயலாளர் (Treasury Secretary) ஸ்டீவன் ம்நுசின் (Steven Mnuchin) உள்ளிட்ட உயரதிகாரிகளை தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்தது

ரூ.14 லட்சம் கோடிக்கு கூடுதல் வரி

ரூ.14 லட்சம் கோடிக்கு கூடுதல் வரி

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய முக்கிய காரணம், பேச்சுவார்த்தை நடக்கும்போதே ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 10 முதல் 25 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவிட்டதுதான். இதனால் சீனா சுமார் 5700 பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக இறக்குமதி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் சீனாவோ வரி குறைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

 எனக்கு இன்னொரு முகம் இருக்கு

எனக்கு இன்னொரு முகம் இருக்கு

இறக்குமதி வரி உயர்வை அறிவித்த கையோடு ட்ரம்ப், சீனா விரைவில் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால், வரும் 2020ஆம் ஆண்டில் என்னுடைய இன்னொரு முகத்தை சீனா பார்க்க வேண்டியது இருக்கும். அப்புறம் பேச்சுவார்த்தை என்பது மிகக் கடுமையாக இருக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.

 என் நாடு என் மக்கள்

என் நாடு என் மக்கள்

ட்ரம்ப் அத்தோடு நில்லாமல், எனக்கு முதலில் என் நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியம், அதன்பிறகு தான் மற்றதெல்லாம். நீங்கள் உடனடியாக இதைச் செய்யாவிட்டால், சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் வேறு நாடுகளை நாடிச்சென்றுவிடும் என்றும் என்று மிரட்டி சீன அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு கடிதமும் எழுதிப் போட்டார்.

நாங்களும் வரியை உயர்த்துவோம்ல

நாங்களும் வரியை உயர்த்துவோம்ல

ட்ரம்ப்பின் மிரட்டலால் சீனா பணியும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சீனாவோ, எதற்கும் அசைந்து கொடுக்காமல், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் உள்பட 5140 பொருட்களுக்கு மேலும் 5 முதல் 25 சதவிகிதம் வரையிலும் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் அமெரிக்காவுக்கு சுமார் 4.23 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது.

சரணடைய மாட்டோம்

சரணடைய மாட்டோம்

கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதோடு நில்லாமல், நாங்கள் எந்தவித மிரட்டலுக்கும் பயந்து சரணடையமாட்டோம், எங்களுக்கு சீனாவின் தேசிய நலனையும் கண்ணியத்தையும் கட்டிக் காப்பதே முக்கியம் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US-China Trade war; China raise tariffs to US goods worth Rs.4.23 lakhs Crore

China again raised tariff rate to US goods ranging from 5 % to 25 % on 5140 products it will worth Rs.4.23 lakhs Crore. The new tariff rate with effect from June 1, according to a statement on the Chinese Finance Ministry.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more