மும்பை : ஓபராய் ரியாலிட்டி நிறுவனத்தின் ஊக்குவிப்பாளரும் அந்த நிறுவனத்தின் தலைவருமான விகாஸ் ஓபராய், மும்பையில் ஆரம்பிக்க உள்ள புதிய புராஜக்ட் திட்டத்திற்காக தனது சொத்துக்கு சொத்தாக இருக்கும் பங்கில் 50% விற்க திட்டமிட்டுள்ளராம்.
மும்பையில் அமையவிருக்கும் 1.74,240 சதுர அடியில் அளவிலான இந்த திட்டம், கடந்த 2004ல் ஆம் ஆண்டில் 104 கோடி ரூபாய்க்கு கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (ஜி.எஸ்.கே) நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 4 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருகிறதாம்.
அதோடு தற்போது அந்த 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆடம்பர ஷாப்பிங் மால், ஹோட்டல் மற்றும் ஒரு அலுவலக கட்டடம் உள்ளிட்ட திட்டங்கள் இருப்பதாகவும் அதற்கான முதலீட்டிற்காக தான் இந்த பங்கு விற்பனை என்றும் விகாஸ் கூறியிருக்கிறாராம்.
ரூ.800 கோடி முதலீடு
அதோடு தற்போது இந்த இந்த புதிய புராஜக்ட்களில் 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகாவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதுவே சொத்து ஆலோசகர்களின் மதிப்பின் படி, இந்த புதிய திட்டம் 2000 கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாம்.
முதலீட்டாளர்களிடம் “We will walk our talk” கூறியுள்ளராம்.
அதோடு இந்த திட்டத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கும் விதத்தில் (திட்டத்தின்) நேர்த்தியாக செயல்பாடுகளே இருக்கும் என்றும் முதலீட்டாளர் அழைப்பில் கூறியிருந்தாராம். அதோடு We will walk our talk என்றும் முதலீட்டாளர்களுக்கு மத்தியில் கூறியுள்ளராம்.
ஷாப்பிங் மால் & அலுவலக கட்டிடம்
இவ்வாறு கட்டப்படும் கட்டிடத்தில் சில்லறை விற்பனையானது குறிப்பிட்ட அளவிலும், அதே நேரம் 80-90 அறைகள் மற்றும் ஒரு அலுவலக கட்டிடம் இருக்குமாம்.
அடுத்தடுத்து இரண்டு மால்களுக்கு திட்டம்
இதோடு மும்பை அடிப்படையாக இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், மேலும் இரண்டு மால்கள் கட்டும் என்றும், இதற்கான பேச்சு வார்த்தையில் முந்தைய தனியார் பங்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அதோடு இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கான யோசனையுடன் ஒரு தனி வணிக வளாகம் (business mall) ஒன்றை அமைப்பதாக விகாஸ் ஒபராய் கூறியுள்ளராம்.
ஷாப்பிங் மாலின் மூலம் ரூ.150 கோடி வருவாய்
இதோடு தற்போது இந்த நிறுவனம் மும்பையில் உள்ள கோரேகான் புறநகர் பகுதியில் ஒரு ஷாப்பிங் மால் நிறுவனம் செயல்படுகிறது. இதில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில், மாலில் 150 கோடி ரூபாய் அதிக வருவாயை அடைந்தததாகவும் விகாஸ் ஒபராய் கூறியுள்ளராம்.


Click it and Unblock the Notifications