பஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஜுன் மாதம் முதல் வாரத்தில் முக்கியமான பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு பயணிக்க கட்டண சலுகை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

 

இண்டிகோ விமான நிறுவனம், ரூ.999 என்ற திட்டத்தினை அனைத்து ரூட்டுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி வரும் 29ம் தேதி முதல் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.

பஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்..  ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு

இந்த திட்டத்தை போல் மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் கட்டண குறைப்பு சலுகையை அமலுக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளது.

நீங்க என்ன செய்யறது? இந்தா நாங்களும் செய்வோம்.. வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

இதன்படி யாரெல்லாம் சென்னையை விட்டு விடுமுறைக்காக வெளியூர்களுக்கு சென்றுள்ளார்களோ அவர்கள் எல்லாம் குறைந்த கட்டணத்தில் சென்னை திரும்ப முடியும். எனவே யாரெல்லாம் ஊர் திரும்புவதற்கு இன்னும் டிக்கெட் புக்பண்ணவில்லையோ ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் வெறும் கட்டண சலுகை மட்டும் அல்லாமல், கூடுதல் எடை பேக்குகள், கூடுதல் லக்கேஜ், பிற வசதிகள் உள்பட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட், நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் வந்து செல்லும் நேரத்தை பயன்படுத்தி தான் விமானங்களை இயக்கப்போகின்றன. அந்த நேரத்தில் தான் விமான கட்டணங்களை குறைக்க உள்ளன. எனவே ஊர் திரும்புவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி பயணத்தை திட்டமிடலாம்.

பெரும்பாலும் கட்டண குறைப்பு என்பது அதிகாலை மற்றும நள்ளிரவு பயணத்தில் தான் இருக்கின்றன. மெட்ரோ நகரங்களில் இருந்து 6 ஆயிரம் முதல் 7 வரையிலும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 2500 முதல் 5000 வரையிலும் கட்டணங்கள் இருக்கின்றன.

இதன்படி பெங்களூருவில் இருந்து ரூ.13000 கட்டணத்தில் சென்னை திரும்ப முடியம், இதேபோல் ஹைதராபாத்தில் இருந்து 1700 இருந்தால் சென்னை திரும்பலாம். புணேவில் இருந்து ரூ.3500, மும்பையில் இருந்து ரூ.2600, டெல்லியில் இருந்து ரூ5000 ஆகிய கட்டணங்களில் சென்னைக்கு வர முடியும். இதேபோல் தான் பல நகரங்களில் இருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flying to Chennai, become cheaper as airlines reduced fares in june

Flying to Chennai, become cheaper as airlines reduced fares following discount sale offer in june first week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X