பார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளை ஆண்ட இங்கிலாந்தில் இந்தியர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்

 

பிரிட்டனில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள முதல் 1000 பணக்கார நபர்களை, அவர்களது நிலம், சொத்து, கலைப் பொருட்கள் போன்ற பிற சொத்துகள், நிறுவனங்களில் உள்ள பங்குகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பட்டியலை தயாரித்ததாக சண்டை டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபிசந்த் இந்துஜா ஆகிய இருவரும் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

பார்ரா.. பிரிட்டன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் !

இவர்கள் இருவரும் பிரிட்டனில் இந்துஜா குழுமத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது சொத்து மதிப்பு 135 கோடி பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.12,270 கோடி) அதிகரித்து, 2,200 கோடி பவுண்ட் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) ஆகியுள்ளது. இதனையடுத்து இவர்களிருவரும் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.

மும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்!

1914ஆம் ஆண்டு மும்பையில் நிறுவப்பட்ட இந்துஜா குழுமம் தற்போது உலகளவில் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. உலக அளவில் இக்குழுமம் எண்ணெய், எரிபொருள், வங்கி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் முதலீட்டுடன் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தை நான்கு சகோதரர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபிசந்த் இந்துஜா ஆகிய இருவரும் ரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள்தான் இப்போதும் 2014 மற்றும் 2017ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

 

இந்த பணக்காரர்கள் பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருப்பவரும் இந்தியாவை சேர்ந்தவரே., மும்பையில் பிறந்த டேவிட் ரூபன் (80), மற்றும் சைமன் ரூபன் (77) ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். இந்துஜா சகோதரர்களைப் போல இவர்களும் சகோதரர்கள். இவர்களது சொத்து மதிப்பு 1,870 கோடி பவுண்டாக (சுமார் ரூ.1.7 லட்சம் கோடிகள் )

இவர்கள் தவிர சர் ஜிம் ரேட்கிளிஃப் என்பவர் - 18.2 பில்லியன் பவுண்டுகளோடு மூன்றாவது இடத்திலும், சர் லென் ப்ளவட்னிக் 14.4 பில்லியன் பவுண்டுகளோடு 4 வது இடத்திலும் சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2.6 பில்லியன் பவுண்டுகளோடு 5 வது இடத்திலும் உள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians top in UK millionaires list

Indians have topped in UK millionaires list again after a break.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X