Jet Airways-ல் தொடரும் ராஜினாமா! இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த வேலையே வேண்டாமப்பா வெறுத்துப் போன சிஇஓ!

மும்பை: ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியைத் தாண்டி, அடுத்த கட்ட நிர்வாகப் பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்கி இருக்கிறது.

கடந்த மே 10, 2019-க்குப் பிறகு போதுமான நிதி கிடைக்காத காரணத்தாலும், புதிய முதலீட்டாளர்களை ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்க முடியாத காரணத்தாலும் ஒவ்வொரு நிர்வாகிகளாக தங்கள் பதவியை ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியல், சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இப்போது இந்த ராஜினாமா பட்டியலில், இத்தனை நாள் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த சிஇஓ வினய் துபேவின் பெயரும் வந்திருப்பது, மொத்த இந்திய விமான சேவை நிறுவனங்கள் மற்றும் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வினய் துபே

வினய் துபே

நேற்று மே 03, 2019 அன்று நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி வினய் தூபே தன் பதவியை ராஜினாமா செய்தார். வினய் துபே ஒரு அமெரிக்க இந்தியர். அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என பல்வேறு பெரிய விமான சேவை நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த ஆகஸ்ட் 2017-ல் தான் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்துக்கு சி இ ஓ-ஆக நியமிக்கப்பட்டார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

நிதி அதிகாரி

நிதி அதிகாரி

சமீபத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்தில் இருந்து அதன் முதன்மை நிதி அதிகாரி (Chief Financial Officer)மற்றும் இணை முதன்மைச் செயல் அதிகாரி (Deputy Chief Executive Officer) அமித் அகர்வால் பதவி விலகினார்.

விஸ்வாசி

விஸ்வாசி

அவர்களுக்கு முன்பு முன்னாள் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவன தலைவர் நரேஷ் கோயலின் நெருங்கிய நண்பர் மற்றும் விஸ்வாசி கெளரங் ஷெட்டி பதவி விலகினார். இவர் ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில், ஒரு இயக்குநராக சில மாதங்களுக்கு முன் தான் அமர்த்தப்பட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

இவர்கள் எல்லாம் தங்கள் பதவிகளில் இருந்தும், இயக்குநர் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்வதற்கு முன், முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நஸீம் சய்தி ஜெட் ஏர்வேஸ் (Jet airways)-ன் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார். அதற்கு "சரியாக நேரம் ஒதுக்கி ஜெட் ஏர்வேஸ் (Jet airways) நிறுவன நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை" எனக் காரணம் சொல்லி பதவி விலகினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+