கச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதா வேண்டாமா என்பது குறித்துத் மக்களவை தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று இந்தியா ஈரானிடம் தெரிவித்துள்ளது.

 

ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய்யை இதர உலக நாடுகள் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று கடுமையாக விமர்சித்ததோடு அந்த ஒப்பந்தத்தை முறிக்கவும் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற உலக நாடுகள் ஈரானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தன.

இதனால் கடுப்பான அமேரிக்கா ஈரான் மீது பொருளாதர தடைகளை விதித்தது. அதோடு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதத்துக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. அல்லாமல் ஈரானுடன் தொடர்ந்து உறவைத் தொடர்ந்தால் சர்வதேச வங்கி நடைமுறை மூலம் கணக்குகள் முடக்கப்படும், டாலர்கள் மூலமான பரிமாற்றத்துக்குத் தடைவிதிக்கப்படும், அமெரிக்காவில் சொத்துகள் முடக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது.

ஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்


அவகாசம் கொடுத்த அமெரிக்கா

அவகாசம் கொடுத்த அமெரிக்கா

இந்த நிலையில் இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது. மே 2-க்குப் பிறகு ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா தெரிவித்திருந்தது.

கோபத்தில் ஈரான்

கோபத்தில் ஈரான்

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையினால் கடும் கோபமடைந்த ஈரான் கப்பல் போக்குவரத்தை நடத்த முடியாமல் ஹார்மூஸ் நீரிணையைக் மூடிவிடப்போவதாக எச்சரித்திருந்தது. இதனால், உலக அளவில் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பெரிதும் தடைபடுவதோடு பிற சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் வாணிபம் பாதிக்கப்படும், தொடர்விளைவாக சரக்குக் கட்டணங்களும், விலைவாசியும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்படும்.

10% எண்ணெய்
 

10% எண்ணெய்

இந்தியாவை பொறுத்தவரை ஈரானிடமிருந்து 10 % கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. அதோடு அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களையும் செய்துகொண்டிருக்கிறோம். ஈரானின் சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்திப் பயன்படுத்தும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கிறது. ஆசிய நாடுகளோடு வாணிப நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் பாகிஸ்தான் வழியை நாம் உபயோகப் படுத்த வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் இப்போது ஈரானின் சபாஹர் துறைமுகத்தைதான் பயன்படுத்தியாக வேண்டும்.

நிபந்தனைக்குப் பணிந்தால்

நிபந்தனைக்குப் பணிந்தால்

அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்து இந்தியா கட்டுப்பட்டு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை தாறுமாறாக உயரும். கச்சா எண்ணெய் வணிகத்தை பொறுத்த மட்டில் ஈரான் நாட்டுடன் மட்டுமே நாம் டாலரில் வணிகம் செய்வதில்லை. பிற நாடுகளுடன் நாம் டாலரில்தான் வணிகம் செய்தாகவேண்டும். நமது அந்நியச் செலவாணி கையிருப்பும் குறையும். இதனால் ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

மே 2ம் தேதியோடு

மே 2ம் தேதியோடு

இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மே 2 ம் தேதியோடு கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்திருந்தது. இப்போது ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஷரிஃப் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் மே 14ஆம் தேதி சந்தித்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுகுறித்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் வந்துள்ளார். நமது கச்சா எண்ணெய்க்கான தேவையில் 80 % கச்சா எண்ணையை இறக்குமதி செய்தே பெற்றுக்கொள்கிறோம் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to decide on Iran oil after LS Poll results

India have decided to take a decision on the buying of Iran crude oil after the LS poll results.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X