டெல்லி : இந்தியாவின் விமான நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் ஜீலை 20 முதல் 6 புதிய விமானங்களை களமிறக்க உள்ளதாம்.
கடந்த மாதம் நிதி நெருக்கடியால் தனது விமான சேவை முழுவதும் நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தப்பட்டதிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு கொண்டாட்டமே.

அந்த வகையில் பல விமான நிறுவனங்களும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும், சலுகைகளை அறிமுகப்படுத்தியும், ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளை தன் பக்கம் ஈர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுத்தப்பட்டதால் அதனுடைய வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களை தேடி செல்வது காண முடிகிறது.
இந்த நிலையில் இண்டிகோ விமான நிறுவனத்தின் இந்த புதிய உள் நாட்டு சேவை, ஷில்லோங்-கொல்கத்தா மற்றும் ரெய்பூர்-கொல்கத்தா ஆகிய இடங்களில் தினசரி விமானங்களாக இயக்கப்படுமாம்.
இதோடு கொல்கத்தா-ஷில்லாங்-கொல்கத்தா ரூட்களில் இண்டிகோவின் அடுத்த பிராந்திய இணைப்புத் திட்டமாக இருக்கும் (Regional Connectivity Scheme) என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விமானம் ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இண்டிகோ விமான நிறுவனம், ரூ.999 என்ற திட்டத்தினை அனைத்து ரூட்டுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி வரும் 29ம் தேதி முதல் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என ஏற்கனவே இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.
இதுவே வெளி நாட்டு சேவையை விரிவாக்கம் செய்வதற்காக சீனாவிடம் ஒப்புதல் பெற ஏற்கனவே அனுமதிக்காக விண்ணப்பித்திருப்பதும், அதோடு சீனா, வியட்நாம், மியான்மார், துருக்கி, சவூதி அரேபியா, மற்றும் சிஐஎஸ் பிராந்தியங்கள் போன்ற சந்தைகளில் நுழைவதற்கும் ஏற்கனவே விண்ணபித்து இருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
ஏற்கனவே சில சமூக ஊடக அறிக்கையின்படி சிவில் ஏவியேஷன் நிர்வாகமானது, ஏற்கனவே இரண்டு நகரங்களில் பறப்பதற்கு இண்டிகோவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி,கொல்கத்தாவில் இருந்து செங்டூ மற்றும் குவாங்சோவிற்கு வாரந்தோறும் ஏழு விமான சேவைகளை இயக்க இண்டிகோ அனுமதி வழங்கியிருந்தது கவனிக்கதக்கது. இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸின் இந்த அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க இதுபோன்ற முயற்சிகள் மேலும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது.


Click it and Unblock the Notifications