ஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா, தனது புதிய முயற்சியாக எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து ஓலா மணி எஸ்.பி.ஐ என்ற கிரெடிட் கார்டை வெளியிட்டுள்ளது.

 

இந்த ஓலா மணி எஸ்.பி.ஐ கிரடிட் கார்டுகள், இந்த முறையில் கிரெடிட் கார்டுகளின் அறிமுகம் என்பது இந்தியாவில் இதுவே முதன்முறை என்று கூறியுள்ள ஓலா, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், மேலும் பல புதிய வாடிக்கையளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கிலேயே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது ஓலா நிறுவனம்.

இது குறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளை, விசா நிறுவனத்தினலான கார்டுகளாகவும் அளிக்கவுள்ளது. மேலும் இந்த கார்டுகளை பெற எந்த விதமான பணமும் செலுத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது ஓலா நிறுவனம்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரூபாய் மதிப்பு.. தேர்தல் முடிவு பயத்தால் தொடர் வீழ்ச்சி

கிரெடிட் கார்டு இலவசம்

கிரெடிட் கார்டு இலவசம்

அதோடு இலவசமாகவே இந்த கிரெடிட் கார்டுகளை வழங்கவுள்ளதாம் ஓலா. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 2022-ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓலா கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டுமென்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளதாம்.

ஓலா ஆப்பிலேயே விண்ணபித்துக் கொள்ளலாம்.

ஓலா ஆப்பிலேயே விண்ணபித்துக் கொள்ளலாம்.

இந்த ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளை நேரடியாக ஓலா ஆப்பிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் கேட்கும் சில தகவல்களை மட்டும் உள்ளீடு செய்து மிக எளிதாகவே இந்த கார்டுகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாமாம்.

பரிவர்த்தனையையும் பார்த்துக் கொள்ளலாம்
 

பரிவர்த்தனையையும் பார்த்துக் கொள்ளலாம்

அதோடு இந்த கிரெடிட் கார்டினால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை இதன் ஆப்பிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றும், இந்த கார்டுக்கான கணக்கையும் இந்த செயலியிலேயே கையாண்டு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஓலா தளத்திலும் விண்ணபிக்கலாம்

ஓலா தளத்திலும் விண்ணபிக்கலாம்

மேலும் ஓலா தளத்திலும் இந்த கார்டுகளை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும், இந்த கார்டுகளை பெற எந்த விதமான பணமும் செலுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளது ஓலா.

நிறைய தள்ளுபடி

நிறைய தள்ளுபடி

இதோடு மட்டும் அல்லாது ஓலாவின் பல சேவைகளுக்கு இந்த கார்டுகள் மூலம் தள்ளுபடி அளித்துள்ளது. குறிப்பாக இந்த கார்டுகள் மூலம் கார்களை புக் செய்பவர்களுக்கு 7 சதவிகித கேஷ்பேக் உண்டாம். அதோடு விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5 சதவிகித கேஷ்பேக்கும், இதுவே உள்நாட்டு ஹோட்டல்கள் பதிவிற்கு 20 சதவிதமும், வெளிநாட்டு ஹோட்டல் பதிவுகளுக்கு 6 சதவிகித கேஷ்பேக்கும் தரப்படுமாம்.

ஹோட்டலில் உணவுக்கு தள்ளுபடி

ஹோட்டலில் உணவுக்கு தள்ளுபடி

மேலும் இந்தியாவிலுள்ள 6,000-திற்குமேற்பட்ட உணவகங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும் உண்டாம். இந்த கார்டுகள் மூலம் செய்யும் மற்ற செலவுகளுக்கு 1 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் சலுகையும் உண்டாம்.

வாடிக்கையாளர்களுக்கு உபயோகம்

வாடிக்கையாளர்களுக்கு உபயோகம்

இதுமட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் பரிமாற்றத்திற்கு 1 சதவிகித கேஷ்பேக் என அறிவித்துள்ளதாம் ஓலா மணி. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் சுலபமாக பணம் செலுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதோடு வாடிக்கையாளர்களுக்கும் பல வகையில் இந்த ஓலா கிரெடிட் கார்டு உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறது ஓலா நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola credit card ஓலா
English summary

Ola launches credit card in tie-up with SBI Card

Ola has launched Ola Money SBI Credit Card in partnership with SBI Card.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X