டெல்லி : இந்தியாவில் முன்னணி வாலெட் நிறுவனமான பேடிஎம் மால் வழங்கிய கேஷ்பேக் ஆஃபர்களில் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும்,அதன் மூலம் 5-10 கோடி வரை பண மோசடி நடந்திருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம்.
இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தணிக்கைக்கு முடிந்த கணக்குகளை மீண்டும் ஆழ்ந்த தணிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இந்த தணிக்கையில் பல ஊழியர்கள் வியாபாரிகளுடன் இணைந்து கூட்டு வைத்திருந்ததும், இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகளாக களாவாடியதும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ரூ10 கோடி வரையில் மோசடி செய்து இருக்கலாம் என்றும் தெரிகிறதாம்.
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் மையமாக்கல் என்பதை பயன்படுத்தி இப்படியும் கூட திருட முடியுமா என்பதற்கு ஏற்ப தான் பேடிஎம்மின் கதையும். எதற்கெடுத்தாலும் ஆஃபர், ஆன்லைன் என தேடி செல்லும் இளவட்டங்களுக்கு இது ஒரு முன் மாதிரியே.
எதற்கெடுத்தாலும் ஆன்லைன்
இந்தியாவில் தற்போது எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்று வந்தாகி விட்டது. தலையில் அணியும் ஹேர் பேன்ட் முதல் காலில் அணியும் செருப்பு வரையிலும், சாப்பிடும் சாப்பாடிலிருந்து, உடுத்துகிற உடை வரையிலும் அனைத்திலும் ஆன்லைன். இதில் என்ன கொடுமை என்னவெனில் ஆன்லைனில் அவர்கள் கூறும் முறையில் பணம் செலுத்தினால் கேஸ் பேக் ஆஃபர்கள் கிடைக்கும் என்றும் விளம்பரம் ஒரு பக்கம்.
கேஷ்பேக் பணம் கிடைக்கவில்லை
இதில் என்னவொரு கொடுமை எனில் இவ்வாறு கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கும் என்ற ஆர்வத்தில், பொருளை வாங்கியவர்கள் பணம் கிடைக்காமல் ஏமாந்துள்ளனர். சிலர் தங்களது வாலட்களில் பணம் வந்துவிட்டதா என்றும் திரும்ப பார்த்து தங்களது போன் தேய்ந்து போனதுதான் மிச்சம்.
தளத்திலிருந்து நீக்கம்
ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்கள் இருக்கும். அப்படி கேஷ்பேக் ஆஃபர் என நம்பியவர்கள் தான் இன்று ஏமாளியாக உள்ளனர். இதை நம்பி வாங்குபவர்கள் ஏமாந்து போனதுடன் ஒரு வகையில் தங்களது பணத்தையும் இழந்தது தான் மிச்சம். இது குறித்து இந்த பேடிஎம் நிறுவனத்தில் வேலை செய்த மோசடியில் ஈடுபட்ட 10 ஊழியர்களும், 100 மேற்பட்ட வியாபாரிகளும் இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனராம்.
ரூ.1800 கோடி நஷ்டம்
இந்த நிலையில் பேடிஎம்மின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா இது குறித்து கூறுகையில், இ- காமர்ஸ் தளமான பேடிஎம்மின் கடந்த 2018-ஆம் ஆண்டின் நஷ்டங்கள் கிட்டத்தட்ட ரூ.1800 கோடியாகும். இதே இதன் வருவாய் வெறும் ரூ.774 கோடி என்றும் கூறியுள்ளார்.
மோசடியை தடுக்க E&Y- யுடன் இணைப்பு
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மூத்த தலைவரான ஸ்ரீனிவாஷ் மோத்தே கூறுகையில், எங்களின் செயற்பாடுகளை அளவிடுவதற்கு தொழில்நுட்ப ரீதியான மோசடி தடுப்பு முறையை உருவாக்க E&Y- யுடன் இணைந்துள்ளோம். மேலும் எமது குழுக்கள் அறிதல்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு தொடர்ந்து செயற்படுகின்றன. நம்பகமான வர்த்தகதளம் ஒன்றை உருவாக்க நாங்கள் மிக கடமைப்பட்டுள்ளோம், அதோடு தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம் மோத்தி கூறியுள்ளார்.
வியாபார நடவடிக்கை குழு
அதோடு நிர்வாகம், நிதி மற்றும் பிற ஆதரவுப் பணிகளைத் தவிர நிறுவனம் ஒரு வியாபார நடவடிக்கை குழுவைக் கொண்டுள்ளது. வணிகர்ளுடன் நெருக்கமாக பணியாற்றி சலுகைகள் வழங்க செயல்படுத்துவோம் என்றார்.
ஆன்லைன் சில்லறை வர்த்தகம்
கடந்த சில ஆண்டுகளில் பேடிஎம் ஆன்லைன் சில்லறை வியாபாரத்தில் பெருமளவில் இடம் பெற்று வருகிறது. தற்போது நிர்வாகம், நிதி மற்றும் பிற ஆதரவுப் பணிகளைத் தவிர, நிறுவனம் ஒரு வியாபார நடவடிக்கை குழுவைக் கொண்டுள்ளது, இது கூட்டாக வணிகர்களுடன் நெருக்கமாக பணியாற்றும். அதோடு பணியமர்த்துதல் மற்றும் சலுகைகள் ஆகியவற்றிற்கு இணங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்த குழு உறுதுணை புரியும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
மோசடிகளை தடுக்கும்
மேலும் இந்த பேடிஎம் மற்றும் E&Y கூட்டணி தணிக்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி இது போன்ற மோசடிகளை தடுக்கும் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
பங்கு தாரர்களுடன் இணைந்து $650 மில்லியன்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பேடிஎம் 650 மில்லியன் டாலர் வரை அலிபாபா, சாஃப்ட் பேங்க், மற்றும் சாயிஃப் முதலீட்டாளர்களுடன் இணைந்து முதலீட்டினை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications