டெல்லி : இந்திய பங்கு சந்தையில் இன்று காலையில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.70.28 ஆக வலுத்திருந்தாலும், கடந்த மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய வீழ்ச்சியே.
இதே கடந்த புதன் கிழமையன்று சந்தையின் முடிவில் இந்திய ருபாயின் மதிப்பு 70.34 ரூபாயாக முடிவடைந்திருந்தது. எனினும் இன்று காலையில் 70.28 ரூபாயாக வலுவடைந்திருந்தது.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவி வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் என்கிறது இந்த ஒரு அறிக்கை. இதே வரப்போகும் இந்திய தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ, புதிய அரசு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்பினாலேயே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதற்கேற்றாற் போல வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் $ 15.30 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதத்தில் 10.9 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 13.7 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இதே நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் 0.6% மட்டுமே அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 26.1 பில்லியன் டாலர்களாக இருப்பது கவனிக்கதக்கது. இதே மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 11% அதிகமாகும்.
இதே இறக்குமதி 4.5% அதிகரித்து 41.4 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 1.4% அதிகமாகும்.
இதுவே இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் அல்ல, உலக நாடுகளின் நாணய மதிப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போரினால் உலக நாடுகள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளன.
குறிப்பாக ஜப்பானின் யென் மதிப்பு 0.07%மும், மலேசிய 0.07%மாகவும், சீனாவின் மதிப்பு 0.08% மாகவும், பிலிப்பைன்ஸ் 0.05% சதவிகிதமும், இதே தாய்வான் டாலரின் மதிப்பு 0.04 சதவிகிதமும், இந்த லிஸ்டில் இந்தியாவில் 0.08 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனினும் இது இன்னும் சரியலாம் என்றும் பொருளாதார நிபுனர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் உள் நாட்டில் நிலவி வரும் குளறுபடிகள் சரியாக வேண்டும் என்றும், அதோடு தேர்தல் முடிவுகள், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளவும் குறுகிய கால அளவிலேயே தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனால் மற்ற நாடுகளையே இந்தியா எதிர்பார்த்துள்ளது. இதனால் நடப்பு கணக்கு பற்றாற்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற்து. இது போன்ற பல காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரியவே வாய்ப்பு உள்ளதாகவும் நிபுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications