அதிகரித்து வரும் விளம்பரத்துறையின் அசுரவளர்ச்சி.. 2021ல் ரூ.1400 கோடிக்கு இலக்கு

மும்பை : இன்றைய கால கட்டத்தில் விளம்பரம் என்பது நம் வாழ்வில் பின்னி பிணைந்து ஒன்றாகி விட்டது. ஏனெனில் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இந்த விளம்பரங்களுக்கு நிறுவனங்கள் கொட்டோ என்று கொட்டுகின்றன. இங்கே பெருகி வரும் போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து உச்சத்தில் நிலைத்து நிற்க விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது. அதற்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் நம்பர் 1 ஆக முடியும். இல்லையேல் தெருவில் கிடக்கும் காகிதம் போல் கசக்கி எரிந்து விடும் இந்த உலகம்,.

எதற்கு தான் தேவையில்லை விளம்பரம். ஏன் பிறந்த குழந்தை அணியும் ஜட்டியிலிருந்து போடும் பவுடர் வரையும், அதே ஒரு செருப்பை விற்க கூட விளம்பரம் தேவைபடுகிறது. இவ்வளவு ஏன் நம் அன்றாட வாழ்வில் நம்க்கென ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. ஆம் நீ அந்த கல்லூரியில் படித்தவன், இந்த நிறுவனத்தில் வேலை புரிபவன் என உங்களுக்கே நீங்கள் விளம்பரம் செய்து கொள்கீறிர்கள்.

விளம்பரம் நமது வாழ்வின் அங்கமாகி விட்டது, இதை வைத்தே பல துறைகள் இன்றளவில் சம்பாதித்துக் கொள்ள கற்றுக் கொண்டு விட்டன. அதிலும் டிவி, சினிமா, புத்தகங்கள், செய்தித்தாள்கள் என அனைத்தும் விளம்பரங்கள் மூலமால்கவே சம்பாதித்து வருகின்றன. இதில் முக்கிய இடம் வகிக்கும் இந்திய சினிமா துறை வருடத்திற்கு வருடம் 20% வளர்ச்சி கண்டு வருகிறதாம். அதிலும் இது 2021ம் ஆண்டு இதன் சந்தை மதிப்பு 1,400 கோடி ரூபாயை எட்டுமாம். இந்த துறையின் தற்போதைய மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாயாக உள்ளது.

15 – 35 வயதுடையோரே டார்கெட்

15 – 35 வயதுடையோரே டார்கெட்

இத்தகைய இன்றைய சினிமா காலகட்டத்தில் எப்போது,ம் 15 - 35 வயது வரையிலானவர்களையே ஃபோகஸ் செய்கிறது. அதுவே சிறந்த சூழலாகவும் கருதப்படுகிறதாம். எனினும் தற்போதைய காலத்தில் இது 70 சதவிகித வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களாகவே உள்ளனர். அவர்கள் திரைப்படங்களுக்கென செய்யப்படும் மார்கெட்டிங் இலக்குகளாக உள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களே எதிர்கால பிராண்டுகளின் வளர்ச்சி, இயக்கி என்கிறார் UFO Moviez India நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி.

அடுத்த கட்ட வளர்ச்சி நகர்புறங்களில் தான்

அடுத்த கட்ட வளர்ச்சி நகர்புறங்களில் தான்

மேலும் இந்த துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி, இந்தியாவின் நகர்புற மையங்களில் இருந்து தான் வரும். குறிப்பாக விளம்பரங்களுக்கான அடுத்த கட்ட வளர்ச்சி டிவி, ஆன்லைன் சேவைகளை விட, சினிமாக்களுக்கு தான் முக்கியத்துவமாக இருக்கும். இந்த துறையின் வளர்ச்சி நகர்புற மையங்களில் உள்ளவர்களிடம் இருந்து தான் துவங்கும்.

சினிமா துறையில் தொழில் நுட்ப மேம்பாடு

சினிமா துறையில் தொழில் நுட்ப மேம்பாடு

மேலும் சினிமா துறையில் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் செயற்கைக்கோள் பரிமாற்றம் போன்ற காரணிகள் சினிமா துறை வேகமாக வளர்ந்து வருவதோடு, அதன் தரமும் அதிகரித்து வருகிறது. இது டிவி, வானொலி மற்றும் டிஜிட்டல் போன்ற மற்ற தளங்களுடன் ஒப்பிடுகையில் உயர் தர சேவைகளை வழங்குவதில் முன்னணி வகித்தும் வருகிறது. அதோடு தரமான தயாரிப்புகளை வழங்குவதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

விளம்பரங்களும் டிஜிட்டல் முறையில்

விளம்பரங்களும் டிஜிட்டல் முறையில்

இந்த வகையில் விளம்பரங்களும் டிஜிட்டல் முறைகளில் மிக தரமான முறையில் அளித்து வருகிறது. இதோடு விளம்பர தாரர்களையும், கருத்து தயாரிப்பாளர்களையும் இந்த பெரிய டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் மட்டுமே விளம்பரங்களைக் கொடுக்க நினைத்தனர். இந்த இடத்தில் மொழி தடையையும் மீறி ஸ்டார் என்கிற பலமே பார்வையாளர்களை வெல்வதற்கு விளம்பரமாக இருந்தது. ஆனால் இது போன்ற பல போக்குகள் மாறி விளம்பரயுக்திகள் அதிகரித்துள்ளன. ஆகா எதுவாயினும் விளம்பரம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலையில் மாற்ற மில்லை. அது தொழில் துறையாகட்டும், சொந்த வாழ்க்கையாகட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+