டெல்லி : சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்படும் கல்வி உதவி தொகையானது இந்தியாவுக்கு சுமார் 26% குறைந்துள்ளதாம். இதே உலக அளவில் இரு சதவிகிதமும் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் தரவின் மூலம் தெரிகிறது.
இந்தியா கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் 464 மில்லியன் டாலர்களை மட்டுமே கல்வி உதவி தொகையாக பெற்றிருந்தது. ஆனால் இதுவே கடந்த 2016-ல் 634 மில்லியன் டாலராக பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து யுனஸ்கோ வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தியாவுக்கு கிடைத்த கல்வி உதவி தொகையானது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்துள்ளதாகவும், இது கல்வித்துறையில் ஒரு மோசமான பாதிப்பை உண்டாக்கும் என்றும் அறிவித்துள்ளது.
பல்வேறு பிரச்சனையை மேற்கொள்ளும்
ஒரு நாட்டின் கிடைக்கும் கல்வி உதவி தொகை கிடைப்பது குறைப்படுமாயின், அந்த நாடு பல்வேறு வகையான பிரச்சனைகளை மேற்கொள்ளும். அதிலும் கல்வியின் இடைப்பட்ட காலத்தில் சரியான உதவி கிடைக்காவிட்டால் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். பின்னர் அனைவருக்கும் கல்வி வழங்குவதில் உள்ள பிரச்சனைகளை சமாளிப்பதில் மிக பிரச்சனைக்குரிய விஷயமாகிவிடும். அதோடு கண்கானிப்பு அறிக்கையின் முக்கிய ஆசிரியரான Manos Antoninis ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
செகண்டரி கல்விக்கான உதவி தொகையை அதிகரிக்க திட்டம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் செகண்டரி கல்விக்கான (secondary education) உதவி தொகை 80 சதவிகிதம் குறைந்தும், இதுவே இடை நிலைக் கல்விக்கான உதவி தொகை 20 சதவிகிதம் உயர்ந்தும் காணப்படுகிறதாம். எனினும் இது எவ்வளவு தொகை என்று கூறப்படவில்லை. இந்தியாவின் இந்த பரிதாப நிலையை பார்த்த பின்பு உலக வங்கி செகண்டரி கல்விக்கான (secondary education) உதவி தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
எங்கெங்கு கல்வி உதவிதொகை
இவ்வாறு உலக நாடுகளில் இருந்து பெறப்படும் உதவி தொகையானது 3 வழிகளில் பெறப்படுகிறது. இது முதலில் சர்வதேச அபி விருத்தி சங்கத்தின் மூலமாகவும், இரண்டாவது ஜெர்மனியிடம் இருந்தும், மூன்றாவதாக ஐரோப்பிய யூனியங்கள் மூலமாகவும் பெறப்படுகிறதாம்.
சர்வதேச அபி விருத்தி சங்கத்தின் மூலம் எவ்வளவு தொகை?
சர்வதேச அபி விருத்தி சங்கத்தின் மூலமாக கடந்த 2014ல் 455 மில்லியன் டாலர்களாகவும், 2015ல் 359 மில்லியன் டாலர்களாகவும், 2016ல் 447 மில்லியன் டாலர்களாகவும், இது 2017ல் வெறும் 240 மில்லியன் டாலர்களாக மட்டும் கிடைத்துள்ளது கவனிக்கதக்கது.
ஜெர்மனியின் மூலமாக பெறப்பட்ட தொகை
இந்தியாவுக்கு அளிக்கும் கல்வி உதவி தொகையில் இரண்டாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இது கடந்த 2014ல் 97 மில்லியன் டாலர்களாகவும், 2015ல் 117 மில்லியன் டாலர்களாகவும், 2016ல் 128 மில்லியன் டாலர்களாகவும், 2017ல் 138 பில்லியன் டாலர்களாகவும் குறைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன்கள் மூலமாக கிடைக்கும் தொகை
இந்த ஐரோப்பிய யூனியன்களிலிருந்து கணிசமான தொகையை அரசு வழங்கி வருகிறது. இது கடந்த 2014ல் 35 மில்லியன் டாலர்களாகவும், 2015ல் 34 மில்லியன் டாலர்களாகவும், 2016ல் வெறும் 3 பில்லியன் டாலர்களாகவும், 2017ல் 30 பில்லியன் டாலர்களாகவும் பெறப்பட்டுள்ளது.
உதவிதொகையாக பெறப்பட்ட மொத்த தொகை
மேற்கண்ட நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட மொத்த கல்வி உதவித் தொகையானது கடந்த 2014ல் 720 மில்லியன் டாலர்களாகவும், 2015ல் 595 மில்லியன் டாலர்களாகவும், 2016ல் 634 மில்லியன் டாலர்களாகவும், இது கடந்த 2017ல் 464 மில்லியன் டாலர்களாகவும் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பங்களிப்பாரான லண்டன்
இந்த லிஸ்டில் முக்கிய பங்கு வகித்து வந்த லண்டன் கடந்த 2017ம் ஆண்டு வெறும் 7.5 மில்லியன் டாலர்களையே வழங்கியுள்ளது. இது இதற்கு கடந்த 2009ல் 208 மில்லியன் டாலர்களை வழங்கியது கவனிக்கதக்கது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து வெறும் 7.5 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது எனவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
முதன்மை கல்வி பிரிவுகளில் மாணவர்கள் குறைந்து விட்டனர்.
ஐ.நா வெளியுட்டுள்ள அறிக்கையில் முதல் நிலை கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது. இது கடந்த 2015ல் வெறும் 5% மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் செகண்டரி பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறுவது 22%லிருந்து 9% சதவிகிதமாக குறைந்துள்ளதாம்.
உந்துதல் தேவை
சமீபத்திய ஆண்டுகளில் கல்வித்துறையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டாலும், மக்கள் அதை அடைவதற்கு மிகுந்த கஷ்டப்படுகிறார்கள் என்றும் கூறுகிறது. எனினும் அனைத்து மக்களும் இதை அடைவதற்கு ஒரு உந்துதல் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.
உதவி இல்லாவிட்டாலும் அனைவருக்கும் கல்வி உறுதி
இது குறித்து இந்தியாவின் மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கல்வி கற்க உறுதியளித்துள்ளாராம். அதோடு சர்வதேச உதவித் தொகை குறைப்பு இந்தியாவின் கல்வித் திறனைப் எவ்வகையிலும் பாதிக்காது என்றும் கூறியிருக்கிறாராம். அதோடு "மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் மேலாக கல்விக்கென செலவழிக்கின்றனவாம்'. மேலும் நிதி மற்றும் கொள்கை முயற்சிகள் இரண்டிலும் பள்ளி கல்வி பற்றி தெளிவான கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளாராம்.
98% ஆரம்ப கல்வி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஆரம்ப கல்விக்கான மதிப்பு 98% அடைந்துள்ளதாகவும், இது சர்வதேச அளவுக்கு அருகில் இருப்பாதாகவும் ஐ.நா அறிவித்துள்ளதாம். வளமான கல்வியே நாட்டின் சொத்து என்பதை இந்திய அரசுகள் தெரிந்து கொண்டு செயல்பட்டால் அனைத்தும் நன்மைக்கே என்பதில் சந்தேகம் இல்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications