இதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனை காரணமாக, அமெரிக்கா மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க போவதாகவும் கூறி வந்த நிலையில் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்ட நிலையில் தற்போது அதை பயன்படுத்திக் கொள்ள மற்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி வருகின்றன.

அட ஆமாங்க சந்துல சிந்து பாட நினைக்கின்றன சில நிறுவனங்கள். கடந்த மாதமே சவுதி அரேபியா ஈரானிடம் இருந்த வாங்கும் கச்சா எண்ணெய்க்கு பதிலாக நாங்கள் தருகிறோம் என்று பேரம் பேசியது அனைவரும் அறிந்த விஷயமே.

இதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா

இந்த நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும், அதுவும் ஜீலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 2 மில்லியன் பேரல்களாக எண்ணெய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா கடந்த நவம்பரில் ஈரான் மீது பொருளாதார நடவடிக்கை விதித்தது. அந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க போவதாகவும் மிரட்டி வந்தது. ஈரானுடன் எந்தெந்த நாடுகள் தொடர்பு வைத்துள்ளனவோ, அதாவது வர்த்தக தொடர்பு வைத்துள்ளனனோ அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவும் தற்போது அமெரிக்காவுக்கு இணங்குவது போல் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டன. ஏன் தற்போது நிறுத்தியே விட்டன. இந்த நிலையில் சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம் 5.6 மில்லியன் டன் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே ஷர்மா கூறுகையில், இந்தியாவுக்கு வரும் ஜீலை மாதத்திலிருந்து மாதத்திலிருந்து 2 மில்லியன் பேரல்களை சப்ளை செய்ய சவுதி அராம்கோ ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது தான் இந்திய பயனாளர்கள் அப்பாடா என்ற மன நிலை நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ என்ற பயமே நிலவி வந்த நிலையில், இதனால் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Aramco to supply extra 2 million barrels a month to Indian Oil from July

Saudi aramco will supply Indian Oil Corp Ltd an extra 2 million barrels of crude every month during July-December, to make up for the loss of supplies from Iran due to U.S. sanctions.
Story first published: Friday, May 17, 2019, 19:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X