டெல்லி : வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 537 புள்ளிகள் அதிகரித்து 37,937 ஆக அதிகரித்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் நிப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 11,407 ஆக முடிவடைந்தது.
இந்த நிலையில் பொருளாதார நிபுனர் வெளியிட்ட அறிக்கையின் படி, முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும். ஏனெனில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மத்தியில் அமையும் ஆட்சி எப்படி என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதோடு வரப்போகும் ஆட்சி எந்த மாதிரியான புதிய வரை முறைகளை விதிக்கும் என்றும் இதனால் சந்தையில் எவ்வகையான மாற்றம் இருக்கும் என்றும் தெரியாது. இதனால் இந்திய பங்கு சந்தைகளிலும் மாற்றம் இருக்கலாம். இந்த மாற்றம் எவ்வகையில் இருக்கும் என்றும் தெரியாது.
ஆக அதிகளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து முதலீடு செய்வது நல்லதே என்கிறார்கள் நிபுனர்கள்.
இந்த நிலையில் இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் ஏற்றத்திலேயே காணப்பட்டன. குறிப்பாக எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகள், அதோடு வங்கித் துறை சார்ந்த பங்குகளும் நல்ல ஏற்றத்துடனேயே காணப்பட்டன. குறிப்பாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பல பங்குகள் அதிகரித்தே வர்த்தகமாகி முடிவடைந்தன.
குறிப்பாக ஹெச்.சி.எஃப்.சி வங்கியின் பங்கு விலை 140 புள்ளிகளை கவர்ந்து கொண்டது. இதே ஐ.சி.ஐ.சி.ஐ, பஜாஜ் பைனான்ஸ், கோடாக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் 120 புள்ளிகளையும், இதே ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்குகள் 85 புள்ளிகளையும் கொண்டு முடிவடைந்தன. மொத்தத்தில் 30ல் 21 பங்குகள் ஏற்றமாகியே வர்த்தகமாகி முடிவடைந்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் தேசிய பங்கு சந்தை நிப்டி டெக்னிக்கல் ஆய்வின் படி ஹெட் அன்ட் ஷோல்டர் பேட்டம் அமைந்திருப்பதாலும், தற்போது பீரேக் அவுட் பாயிண்டில் இருப்பதாலும் இனி வரப்போகும் சந்தைகளில் ஏற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதோடு தேசிய பங்கு சந்தை சார்ந்த நான்கு நிறுவனங்கள் இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. இந்த நிலையில் இந்த 4 பங்குகளில் 3 சந்தைக்கு ஆதரவாகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதி பஜாஜ் ஆட்டோ 21% நிகரலாபத்துடனும், டி.ஆர்.எல் 44% சதவிகித லாபத்துடனும் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதே சென்செக்ஸ் இண்டக்ஸில் 30 பங்குகளில் இன்றைய சந்தையில் 23 பங்குகள் வளர்ச்சி கண்டுள்ளன.
இதில் பஜாஜ் பைனான்ஸ் அதிகளவிலான லாபத்துடனும், ஹீரோ மோட்டார் கார்ப், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, கோடாக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெய்னராக இன்றைய சந்தையில் இருந்தன.
இதே யெஸ் பேங்க் இதற்கு எதிராக மிக மோசமான பங்களிப்புடன் இருந்தது. ஹெச்.சி.எல் டெக்னாலஜி, வேதாந்தா, இன்ஃபோசிஸ், டி.சிஎஸ் மற்றும் சன் பார்மா நிறுவன பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.
இதே துறை வாரியாக பார்க்கும் போது ஐ.டி துறை, ஹெல்த்கேர் மற்றும் உலோகங்கள் துறை சார்ந்த பங்குகள் சரிந்தும், இதே எஃப்.எம்.சி.ஜி, பேங்குகள், சார்ந்த பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி முடிவடைந்தன.


Click it and Unblock the Notifications