டெல்லி : முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்றுள்ளராம். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 28சதவிகிதம் அதிகமாகும்.
இந்த மொத்த சம்பளத்தில் 1.15 கோடி ரூபாய் இழப்பீடாகவும், அதோடு ஊக்கத் தொகையாக 1.26 கோடி ரூபாயாகவும், 13 கோடி ரூபாய் கமிஷனாகவும், 60 லட்சம் ரூபாய் செலவு தொகையாகவும், இதெல்லாம் சேர்த்து 16.02 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதில் கடந்த 2017 - 2018ல் அவரது இழப்பீடு 12.49 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இதுவே டி.சி.எஸ் தலைமை நிர்வாக இயக்குநரான கணபதி சுப்பிரமணியம், கடந்த நிதியாண்டில் 11.61 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு 9.29 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இதே டி.சிஎஸ் தலைமை நிதி அதிகாரி ராமகிருஷ்ணன் அதிகாரியின் சம்பள தொகை ரூ.4.13 கோடியாக இருந்தது.
மும்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தின் சராசரி வருவாயில் 6% அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த வருவாய் 7.2% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
டி.சி.எஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே ஊழியர்களுக்கு 2 - 5% வரை ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. இந்த ஊதிய உயர்வு அந்தந்த நாட்டின் சந்தை மதிப்பினை பொறுத்தும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது டி.சி.எஸ் நிறுவனம்.
இதுவே கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் சம்பளம் கடந்த 2016லேயே 200 மில்லியன் டாலர்களாகும்.
இதே விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் சம்பளம் கடந்த 2018ம் நிதியாண்டில் அபிதாலி இழப்பீடு 34% உயர்ந்து 18.2 கோடியாக உயர்ந்திருந்தது கவனிக்கதக்கது. அதே சமயம் ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் 12 கோடி ரூபாயாக இருந்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications