டெல்லி : இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்த வியாழக்கிழமை அதன் ஊழியர்களுக்கு தொடர்ச்சியான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகளை அங்கீகரித்துள்ளது என்றும், இது தவிர ஊழியர்களை ஊக்குவிக்க ஐந்து கோடி பங்குகளை ஒதுக்குவதற்கான திட்டத்திற்கு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் இந்த நிறுவனத்தின் சி.ஓ.ஓ பிரவீன் ராவ் ஆகியோரும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனராம்.
இதையடுத்து இந்த நிறுவனம் அறிவித்துள்ள "விரிவாக்கப்பட்ட பங்கு உரிமையாளர் திட்டம் 2019" செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களை ஊக்குவிக்க ஐந்து கோடி பங்குகளை ஒதுக்குவதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டது.

மேலும் செயல்திறன் (performance) மீதான மானியங்கள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்றும், அதன்படி 2019 திட்டத்தின் கீழ் 5 கோடி பங்குகளை (நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 1.15%) அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சலில் பரேக், இந்த திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் செயல்திறன் அடிப்படையிலான பங்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல இன்போசிஸ் சி.ஓ.ஓ பிரவின் ராவ் ஆண்டுதோறும் செயல்படும் அடிப்படையிலான பங்கு ஊக்கத்தொகைகளை 4 கோடி ரூபாய் என்றும் கூறியுள்ளனராம். இந்த ஊக்கத்தொக்கைகான பங்கு அளிப்பு, ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான உறவை வலுபடுத்தும் என்றும், இதனால் மிக திறமையான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம் இந்த நிறுவனம்.
மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் எங்கள் பணியாளர்கள் எங்கள் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார்கள், இந்த பங்கீட்டு திட்டத்தின் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்குவதை உறுதிபடுத்தும் நபர்களை அடையாளம் காணவும், அதை வெளிக்காட்டவும் நாங்கள் விரும்புகிறோம்.
அப்படிப்பட்ட ஊழியர்களை உரிமையாளர்களை உருவாக்குவதன் மூலம் நீண்ட கால வெற்றியில் நிறுவனம் இருக்க வாய்ப்பளிப்பார்கள் என்றும் பரேக் கூறியுள்ளராம்.
இந்த பங்கீட்டு நடவடிக்கைகள் 2019 மார்ச் காலாண்டில் 20.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 19.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய திட்டம் இன்ஃபோசிஸ் 2015 திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கடந்த 2019 ஆம் நிதியாண்டின் திட்டத்தின் கீழ், இந்த பங்கீட்டு முறைகள் கண்டிப்பாக செயல்திறன் அடிப்படையிலேயே அளிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications