நெனப்பு பூரா சொம்புல தான் இருக்கு! லேட்டஸ்ட் வெர்சன்... மனசு பூரா Mind Tree-ல தான் இருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: எங்கள் கவனம் முழுவதும் சின்ன ஐடி நிறுவனமான மைண்ட் ட்ரீ (Mind Tree)-ல் தான் இருக்கிறது. இந்த மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்பதே இந்த வருடத்தில் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் முதல் முக்கிய வேலையாக இருக்கும் என்கிறார் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஏ எம் நாயக்.

தற்போது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இந்த லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ஏற்கனவே மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தில் 26 சதவிகித பங்குகளை வாங்கி விட்டது. தற்போது மேற்கொண்டு மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை வாங்க ஒரு ஓப்பன் ஆஃபரையும் வெளியிட லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தயாராக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் அதன் தலைவர் ஏ எம் நாயக்.

 நெனப்பு பூரா சொம்புல தான் இருக்கு! லேட்டஸ்ட் வெர்சன்... மனசு பூரா Mind Tree-ல தான் இருக்கு..!

லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்துக்கு மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை கையகப்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் முழு முதல் முதலாளியாகவே உள்ளே இறங்க வேண்டும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போது தான் "முதன்முதலில் மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனம் வந்த போது அதில் உள்ள பிசினஸ் வாய்ப்புகளை ஆராய்ந்தோம். இப்போது மனசு பூராவும் மைண்ட் ட்ரீ (Mind Tree)-லத் தான் இருக்கு. இந்த மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டு வர முடியும் என நம்புகிறோம்" எனப் பேசி இருக்கிறார்.

அசுர வளர்ச்சியாக இருக்குமாம்.. நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்குமாம் அசுர வளர்ச்சியாக இருக்குமாம்.. நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்குமாம்

அதோடு "மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தின் புரொமோட்டர்கள், தங்கள் நிறுவனத்தின் மீது பெரிய பற்று வைத்திருக்கிறார்கள். புரொமோட்டர்களைப் போலத் தான், மைண்ட் ட்ரீ (Mind Tree) ஊழியர்களும் தங்கள் நிறுவனத்தின் மீது ஒரு அசைக்க முடியாத அன்பை வைத்திருக்கிறார்கள். ஆகையால் லார்சன் அண்ட் டியூப்ரோவிடம் தங்கள் நிறுவனத்தைக் கொடுக்க ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் இப்போது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் மீது மைண்ட் ட்ரீ (Mind Tree) புரொமோட்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது என நம்புகிறேன்" என்கிறார் ஏ எம் நாயக்

"எப்படியும் மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவன பங்குகளை விற்க இருக்கிறீர்கள். நீங்கள் எப்போது எல்லாம் மைண்ட் ட்ரீ (Mind Tree)-ன் பங்குகளை விற்கிறீர்களோ அல்லது விற்க விரும்புகிறீர்களோ, எங்களிடம் விற்றுவிடுங்களேன், நாங்கள் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்" எனவும் மெலிதாக மிரட்டி இருக்கிறார் ஏ எம் நாயக்.

அவளே என்னய விட்டு பொய்ட்டா எனக்கு எதுக்கு சொத்து பத்து எனக் கொஞ்சம் கலங்கி இருந்த ஏ எம் நாயக் அவளே என்னய விட்டு பொய்ட்டா எனக்கு எதுக்கு சொத்து பத்து எனக் கொஞ்சம் கலங்கி இருந்த ஏ எம் நாயக்

இப்போது நல்ல பிசினஸ் மூடில் இருக்கிறார் போல. ஒட்டு மொத்தமாக மைண்ட் ட்ரீ (Mind Tree)நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகள் வரை வாங்க லார்சன் அண்ட் டியூப்ரோ கழுகு போல கணக்கு போட்டு காத்துக் கொண்டிருக்கிறதாம். இந்த டீலுக்கு அதிக பட்சம் 10,800 கோடி ரூபாய் வரை செலவு செய்யவும் கண்ணத்தைச் சொரிந்து கொண்டு காத்திருக்கிறது லார்சன் அண்ட் டியூப்ரோ. அதற்கு சூத்திரதாரியாக ஏ எம் நாயக் தன் அக்வசிஷன் (Acquisition) பசி கொண்ட வயிற்றை தடவிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

all my mind is in mind tree acquisition a m naik statement about their mind tree acquisition

all my mind is in mind tree acquisition a m naik statement about their mind tree acquisition
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X