மனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் $40 மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்

நியூயார்க் : அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ராபர்ட் எஃப். ஸ்மித் என்பவர் சுமார் 400 மாணவர்களுக்கான கடனை அடைக்க திட்டமிட்டுள்ளாராம். இது சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ளதாம்.

சுமார் 400 இளைஞர்கள் மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டம் பெறத் தயாராக உள்ளனர். இவர்கள் மிகுந்த நம்பிக்கை நிறைந்தவர்கள், ஆனால் அவர்களது கல்விக்கு நிதியுதவி அளித்த கடன்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெரும் சுமையைச் அவர்கள் மீது சுமத்தியது. இதனால் தான் அந்த 400 மாணவர்களின் கடனை கட்டுவதாக கூறியுள்ளராம்.

விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸை நிறுவத்தின் நிறுவனரான, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரும் கறுப்பு மனிதனான ராபர்ட் எஃப். ஸ்மித் பேசுகையில், மாணவர்கள் யாரும் அவர்களது கடனை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். அவர்களின் கடனை ஸ்மித்தும் மற்றும் அவரது குடும்பம் முழு பட்டப்படிப்புக்கு உண்டான மாணவர்களின் கடன்களை செலுத்தி விடும் என்றும் கூறியுள்ளாராம்.

பிளானில் கொஞ்சம் மாற்றம்

பிளானில் கொஞ்சம் மாற்றம்

ஆனால் இதற்கு முன்பு ஒரு மாஸ்டர் திட்டம் இருந்ததாம். அது அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸில் ஒரு வேலைவாய்ப்பு தொடர்பான இண்டர்ஷிப் ஆக இருக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் மாணவர்களுக்கு சர்பிரைஸ்ஸாக இருக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாம். இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக சந்தோஷத்தை வழங்கியதாம்.

மேல் படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கும்

மேல் படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கும்

மேலும் இந்த கடன் பிரச்சனையால் பல்வேறு மாணவர்கள் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போகலாம். இவ்வாறு கடனை அடைப்பதன் மூலம் பல மாணவர்கள் மேல் படிப்புக்கான வாய்ப்பினை பெறுவர் என்றும் கூறியுள்ளராம் ஸ்மித்.

ஸ்மித்தின் இந்த நடவடிக்கை ஆச்சரியம்!

ஸ்மித்தின் இந்த நடவடிக்கை ஆச்சரியம்!

எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது பிரச்சார தளங்களில் கடனை ரத்து செய்வதாக கூறுகின்றனர். ஏன் சிலர் கல்வியை இலவசமாக தருகிறோம் என்று கூட சொல்கிறார்கள். ஆனால் எதுவும் சாத்தியமானதாக தெரியவில்லை. எனினும் ஸ்மித்தின் இந்த நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் நியூயார்க் மக்கள் கூறியுள்ளனராம்.

கருப்பு இனத்தவர்களை மேம்படுத்த திட்டம்

கருப்பு இனத்தவர்களை மேம்படுத்த திட்டம்

மேலும் ஸ்மித் தான் மட்டும் அல்லாது தனது வர்க்கமும் இந்த சேவையை தொடரும் என்று கூறியுள்ளராம். இது அமெரிக்காவின் கருப்பு இனத்தவர்களை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறியுள்ளராம். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்மித் பள்ளிக்கு $ 1.5 மில்லியனுக்கு நன்கொடை அளித்தும் இருக்கிறார் என்பது கவனிக்கதக்கது.

$ 90,000 மாணவர் கடன்களில் இருக்கிறார்கள்

$ 90,000 மாணவர் கடன்களில் இருக்கிறார்கள்

மேலும் ஸ்மித் $ 90,000 மாணவர் கடன்களில் இருப்பதாகவும், இது அதன் ஒரு பகுதிதான் என்றும் கூறினாராம். அதோடு அவரது தாயார் ஆண்ட்ரியா டார்முஸ் நியூயார்க்கின் ஹார்லெம் சுற்றுப்பகுதியில் ஒரு பள்ளி பஸ் டிரைவராக இருந்தவர் எனவும் பெருமிதம் கொண்டுள்ளராம்.

கார்னெல் மற்றும் கொலம்பியா பட்டதாரி ஸ்மித்

கார்னெல் மற்றும் கொலம்பியா பட்டதாரி ஸ்மித்

கார்னெல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களின் பட்டதாரி ஸ்மித், கடந்த 2000 ஆம் ஆண்டில் விஸ்டா ஈக்விட்டி நிறுவனத்தினை ஆரம்பித்துள்ளார். அதோடு 2015 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி பணக்கார ஆப்பிரிக்க அமெரிக்கரானாராம்.

அதிகரித்து வரும் கட்டணங்கள்

அதிகரித்து வரும் கட்டணங்கள்

அதோடு சமீபத்திய ஆண்டுகளில், கல்லூரிக் கல்வியின் உயரும் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் கட்டணங்கள் ஆகியவை மாணவர்களின் கடன்களை பெருக்கி வருகிறது. இது தேசியப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

ஏதோ என்னால் முடிந்தது

ஏதோ என்னால் முடிந்தது

மேலும் ஃபிட்ச் மதிப்பீடுகள் நிறுவனத்தின்படி, மொத்த மாணவர் கடன் இப்போது $ 1.5 டிரில்லியனைக் கடக்கிறது. ஏதோ என்னால் முடிந்த அளவைக் கொடுத்ததில் நான் சதோஷப்படுகிறேன் என்றும், நிம்மதி பெருமூச்சு விடுவதாகவும் கூறியுள்ளாராம்.

ஸ்மித் மீண்டும் வரலாம்

ஸ்மித் மீண்டும் வரலாம்

இது குறித்து அந்த கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிவிப்பால மாணவர்களின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், ஒருவேளை அடுத்த வருடம் அவர் வந்தாலும் வருவார் என்றும் கூறுகிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+