டெல்லி : இந்தியா பங்கு சந்தைகளில் கடந்த வாரம் முன்னணி நிறுவனங்களில் 10ல் 9 நிறுவனங்கள், தனது சந்தை மதிப்பை அதிகரித்துக் கொடுள்ளனவாம். அவ்வாறு அதிகரித்த சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 82,379.79 கோடி ரூபாயாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு சந்தை மதிப்பு அதிகரித்த நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கிகள் தான் முன்னிலை வகித்தனவாம்.
இதே கடந்த வாரத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதாவது 1.24 சதவிகிதம் அதிகரித்தது. இது கடந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 37,930.77 ஆக முடிவடைந்தது.
மூலதனம் அதிகரித்தது
இதே இந்த மாற்றம் பரஸ்பர சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை எண்ணங்கள் காரணமாக முதலீடு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் மூலதனமும் அதிகரித்ததுள்ளது கவனிக்கதக்கது.
டி.சி.எஸ் சரிவு
இதே டிசிஎஸ் அதன் சந்தை மதிப்பீட்டில் சரிவை பதிவு செய்யும் நிறுவனமாக இருந்தது. எனினும் இதற்கு முந்தைய வாரத்தில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் அதிகரித்திருந்தது கவனிக்கதக்கது. அதிலும் 10 நிறுவனங்களில் டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் அதிகரித்தது.
ஹெச்.டி.எஃப்.சி மூலதம் அதிகரிப்பு
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மூலதனம் அதிகபட்சமாக 17,685.54 கோடி ரூபாய் அதிகரித்து 6,43,560.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய வாரத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு 19,634 கோடி சரிந்து 6,25,874.51 கோடி ரூபாயாக சரிந்திருதது.
கோடாக் மஹிந்திரா வங்கி மூலதனம்
மேலும் கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பீடானது ரூ.12,531.51 கோடி அதிகரித்து ரூ.2,78,823.62 கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே ஹெச்.டி.எஃப்.சியின் மதிப்பு 10,776.2 கோடி ரூபாய் அதிகரித்து 3,43,211.58 கோடி ரூபாயாக உயர்த்தியது. இது முன்னர் 13,573.5 கோடி ரூபாயை இழந்து 3,32,435.38 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
முன்பை விட அதிகரித்துள்ளது.
அதோடு இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (ஹெச்.யூ.எல்.) நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,531.29 கோடி அதிகரித்து 3,75,738.57 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுவே எஸ்.பி.ஐயின் மதிப்பு ரூ. 9,727.82 கோடியாக உயர்ந்து 2,84,650.48 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே இந்த இரு நிறுவனங்களும் இதற்கு முந்தைய வாரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,233.88 கோடி ரூபாய் குறைந்து 3,65,207.28 கோடி ரூபாயாக குறைந்தது. இதே எஸ்.பி.ஐ சந்தை மதிப்பு ரூ.981.71 கோடி குறைந்து 2,74,922.66 கோடி ரூபாயாக குறைந்திருதது குறிப்பிடத்தக்கது.
எப்பவுமே டாப் தான் ரிலையன்ஸ்
இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 9,635.15 கோடியாக அதிகரித்து ரூ. 8,02,316.11 கோடியாக உயர்ந்ததுள்ளது. ஐடிசி நிறுவனத்தின் மதிப்பு 4,535.7 கோடி ரூபாயயை எட்டி ரூ.3,69,475.16 கோடி அதிகரித்தும் இருந்தது. இதுவே இதற்கு முன்னர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.99,212.9 கோடி சரிந்து ரூ.7,92,680.96 கோடியாக சரிந்திருந்தது கவனிக்கதக்கது. இதுவே ஐடிசியின் சந்தை மதிப்பு 7,232.6 கோடி ரூபாயிலிருந்து 3,64,939.46 கோடியாக குறைந்தும் இருந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ ரூ.3,570.66 கோடி அதிகரிப்பு
இதே ஐசிஐசிஐ வங்கி ரூ.3,570.66 கோடி மூலதனத்தை அதிகரித்து ரூ. 2,51,682.91 கோடியாக உயர்த்தியுள்ளது. இன்போசிஸ் 3,385.92 கோடி ரூபாய் சந்தை மதிப்பை அதிகரித்து 3,16,223.26 கோடியாகவும் உயர்த்தியது கவனிக்கதக்கது.
சந்தைக்கு எதிரான வீழ்ச்சி
எனினும் முந்தைய வாரத்திற்கு மாறாக, டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) மதிப்பீடுரூ.14,709.4 கோடி சரிந்து ரூ.7,86,631.17 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் மீண்டும் முதலிடம்
இந்த நிலையில் டாப் 10 நிறுவனங்களில் முதல் ரிலையன்ஸ் நிறுவனமே பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த நிறுவனங்களாக டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐ.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்
இதற்கு முன்னர் டி.சி.எஸ் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அதை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் முதலிடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications