பட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்

டெல்லி : நாடு முழுவதும் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் பாஜக அதிக தொகுதிகளுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன. இதன் எதிரொலி இன்றைய பங்குச்சந்தையிலும் காணப்பட்டது.

குறிப்பாக இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடனேயே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் அதிகரித்தும், இதே நிஃப்டி சுமார் 240 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமானது. இதே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சுமார் 73 பைசா அதிகரித்து ரூ.69.49 என்ற அளவில் இருந்தது.

பட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்

காரணம் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்ததால், முதலீட்டாளர்கள் நிதிக் கொள்கையில் பெரியதொரு மாற்றம் இருக்காது என்றும், மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். இதனால் இந்த சந்தைகள் முடிவில் சென்செக்ஸ் சுமார் 1421 புள்ளிகள் அதிகரித்து, 39352 ஆக முடிவடைந்தது. இது சுமார் 3.75 சதவிகிதமாகும். இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 421 புள்ளிகள் அதிகரித்து 11,828 ஆக முடிவடைந்தது. இதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.70 ஆக அதிகரித்தும் வர்த்தகமானது.

63,445 ரூபாய் சம்பளம் வாங்கும் ரவி அண்ணனுக்கே Loan கிடையாதா..? ஏன்..?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பொதுத்துறை வங்கிகள், இன்ஃப்ரா, ஆட்டோ, எரிசக்தி, எஃப்எம்சிஜி, உலோகம் மற்றும் மருந்து ஆகியவற்றின் தலைமையின் கீழ் அனைத்து துறை பங்குகளும் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்தன.

இதே நிஃப்டியில் இந்தியா புல்ஸ் ஹவுஸிங், இந்தஸ்தங் வங்கி, அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. அதே டி.ஆர் ரெட்டி லேப்ஸ், ஜீ என்டர்டெயின்மன்ட், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்கு விலைகள் நஷ்டத்தைச் சந்தித்தன.

இதில் 2013 பங்குகள் சந்தைக்கு சாதகமாகவும், 613 பங்குகள் வீழ்ச்சியடைந்தும், 155 பங்குகள் மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாகின.

இதையடுத்து சென்செக்ஸ் கடந்த 10 ஆடுகளில் இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதோடு ஞாயிறன்று முடிவடைந்த ஆறு வார கால பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும்பான்மையான இடம் என்பதையடுத்தே இந்த ஏற்றம் என்றே கருதுகின்றார்கள் நிபுனர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+