டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு பாதையில் செல்லும் என்றும், இது வலுவான வளர்ச்சியின் இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டு எனவும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கணபதி சுப்பிரமணியம் கூறியுள்ளராம்.
கடந்த காலாண்டில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி, டிசிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய நிதி ஆண்டில் ஆரோக்கியமான ஒப்பந்தம் வெற்றிகரமாக பாதைக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் வளர்ச்சி விகிதத்தில் மிக நம்பிக்கை உள்ளதாகவும் டி.சி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் வளர்ச்சி 2.8 சதவிகிதமாக இருந்தது, இதே நடப்பு நிதி ஆண்டில் 3.6 சதவிகிதமாக இருக்கிறது. இது 2014-15 ஆம் ஆண்டில் இருந்த வளர்ச்சியை விட 15 சதவிகிதம் அதிகரிததுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத ஒரு வளர்ச்சியாக இந்த நிதியாண்டில் அதிகரித்து வருகிறது.
மேலும் சுப்ரமணியத்தின் கூற்றுப்படி, கடந்த 12 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்த வெற்றிகளை நிறுவனம் பெற்றிருக்கிறது. இது இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவும் என்றும், இதே டி.சி.எஸ் கடந்த ஆண்டு 2018 - 2019 ல் ஒப்பந்தங்களின் மொத்த ஒப்பந்த மதிப்பு $ 21.9 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெற்றிருப்பது கவனிக்கதக்கது என்றும் கூறியுள்ளார்
டி.சி.எஸ் நிறுவனத்தின் இந்த வலுவான வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் வருவாயில் இன்னும் 753 மில்லியனை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 2019ம் நிதியாண்டில் வளர்ச்சி 11.4% கண்டது. எனினும் நாணய ஏற்ற இறக்கங்கள் சில ஷீனை எடுத்துக் கொண்டது. இதனால் இந்த நிறுவனம் 9.6% டாலர் வருவாய் வளர்ச்சியை பெற்றது. மேலும் புதிய ஆர்டர்கள் வருவாயில் 1.82 பில்லியன் டாலரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ்ஸின் வலுவான வளர்ச்சி, அதன் நெருக்கமான போட்டியாளரான காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷனுடன் ஒப்பிடும் போது, அதன் முழு ஆண்டு வளர்ச்சி கணிப்பு 44% ஆக குறைந்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் 5.1% மதிப்பீட்டை சிறந்ததாக மதிப்பிடுகிறது. இது 2019-20 காலப்பகுதியுடன் கூடுதல் வருவாயில் 823 மில்லியன் டாலராகும். இது டி.சிஎஸ் நிறுவனத்தை விட 70 மில்லியன் டாலர்கள் மட்டுமே அதிகம். எனினும் டி.சி.எஸ் நிறுவனம் இதை நடந்து கொண்டிருக்கும் காலாண்டிலேயே அதிகரித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை என்கிறதாம் இந்த நிறுவனம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications